விஷாலுக்கு நன்றி தெரிவித்த டிசம்பர் 3 இயக்கத்தினர்

  • IndiaGlitz, [Saturday,May 07 2016]

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 3 இயக்கத்தினர்களுடன் இணைந்து சமீபத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின்போது நடிகர் சங்கம் சார்பில் போராட்டக்காரர்களுக்கு உணவு அளிக்கப்பட்டது.


இந்நிலையில் இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் டிசம்பர் 3 இயக்கத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிலர் விஷாலை நேரில் சந்தித்து நன்றி கூறியதோடு ஒருசில கோரிக்கைகளையும் வைத்துள்ளனர்.

இதுகுறித்து டிசம்பர் 3 இயக்கத்தினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு பின்வருமாறு: 05.05.2016 அன்று நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு.விஷால் அவர்களை டிசம்பர் இயக்கத்தின் சார்பில் மாநில நிர்வாகிகள், அவரது இல்லத்தில் சந்தித்து போராட்டத்தின்போது உணவளித்து உதவியதற்கு நன்றியையும் மற்ற மாற்றுத்திறனாளிகள் சந்தித்த கோரிக்கையையும் விடுத்தோம்.

தவழும் மாற்றுத்திறனாளிகள் கழிவரையில்லாமல் படும் வேதனையையும் தோழர் கமலநாதன் அவர்களை கொண்டே விளக்கினோம். இரண்டு வாரத்தில் மீண்டும் சந்தித்து விரிவாக விவாதிப்போம் என்று உறுதி கொடுத்துள்ளார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.