பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்த நடிகர் விஷால்: திடீரென டுவிட்டை டெலிட் செய்தது ஏன்?

தமிழ் திரையுலகின் அதிரடி ஆக்ஷன் நடிகரான விஷால் திடீர் என பிரதமர் மோடிக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்து அதன்பின் திடீரென அந்த டுவிட்டை டெலிட் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால் தற்போது ’மார்க் ஆண்டனி’, ‘துப்பறிவாளன் 2’ மற்றும் ‘லத்தி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த மூன்று படங்களின் படப்பிடிப்பும் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஷால் கடந்த சில நாட்களுக்கு முன் வட இந்திய சுற்றுலா சென்று இருந்தார் என்றும்  குறிப்பாக அவர் காசியில் உள்ள பல கோவில்களைல் சுவாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பதிவாகி வைரலானது என்பதும் தெரிந்ததே.


இந்த நிலையில் சற்று முன் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். திரு மோடி அவர்களுக்கு வாழ்த்துக்கள்! நான் காசிக்கு சென்று அற்புதமான தரிசனம் செய்தேன். ஒவ்வொரு கோயிலும் பூஜை செய்து கங்கா நதியில் புனித நீரை தொட்டேன். காசியில் உள்ள கோயிலை மிகவும் அற்புதமாக வைத்திருக்க நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். அதுமட்டுமின்றி எளிதாக யாரும் தரிசனம் செய்யும் வகையில் நீங்கள் செய்த நடவடிக்கை உண்மையிலேயே பாராட்டுக்குரியது. நீங்கள் செய்த இந்த மாற்றத்திற்காக கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்’ என தெரிவித்துள்ளார். ஆனால் இந்த டுவிட்டை அவர் ஒருசில நிமிடங்களில் டெலிட் செய்துவிட்டார்.

பிரதமர் மோடியை நடிகர் விஷால் பாராட்டு தெரிவித்து பின் திடீரென அந்த டுவிட்டை டெலிட் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

'விக்ரம்', 'பொன்னியின் செல்வன்' வசூலை முறியடித்ததா 'காந்தாரா'?

சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வசூல் பெற்ற கமல்ஹாசனின் 'விக்ரம்' மற்றும் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' ஆகிய படங்களின் வசூலை 'காந்தாரா' திரைப்படத்தின் வசூல் முறியடித்து உள்ளதாக

'ஆர்.ஆர்.ஆர்' படத்தை அடுத்து ஜப்பானில் ரிலீஸ் ஆகும் விஜய்யின் சூப்பர்ஹிட் படம்!

சமீபத்தில் பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் ஜப்பானில் ரிலீசாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக தளபதி விஜயின் சூப்பர் ஹிட் படம்

ஹன்சிகாவின் வருங்கால மாப்பிள்ளை இந்த தொழிலதிபரா? திருமண தேதி குறித்த தகவல்!

தமிழ் சினிமாவில் விஜய் உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்த ஹன்சிகா பிரபல தொழிலதிபரை திருமணம் செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ட்விட்டர் புளுடிக் வைத்திருப்பவர்களுக்கு கட்டணம்.. மாதம் இத்தனை ஆயிரம் ரூபாயா?

பிரபலமானவர்களின் ட்விட்டர் பக்கத்திற்கு  புளுடிக் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது என்பது தெரிந்ததே. ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் கைக்கு வருவதற்கு முன்னர் வரை இது இலவசமாக வழங்கப்பட்டு

சென்னை மக்களே தயாராகுங்கள்: கனமழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன்!

வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதை அடுத்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்