பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்த நடிகர் விஷால்: திடீரென டுவிட்டை டெலிட் செய்தது ஏன்?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் அதிரடி ஆக்ஷன் நடிகரான விஷால் திடீர் என பிரதமர் மோடிக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்து அதன்பின் திடீரென அந்த டுவிட்டை டெலிட் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால் தற்போது ’மார்க் ஆண்டனி’, ‘துப்பறிவாளன் 2’ மற்றும் ‘லத்தி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த மூன்று படங்களின் படப்பிடிப்பும் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் விஷால் கடந்த சில நாட்களுக்கு முன் வட இந்திய சுற்றுலா சென்று இருந்தார் என்றும் குறிப்பாக அவர் காசியில் உள்ள பல கோவில்களைல் சுவாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பதிவாகி வைரலானது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் சற்று முன் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். திரு மோடி அவர்களுக்கு வாழ்த்துக்கள்! நான் காசிக்கு சென்று அற்புதமான தரிசனம் செய்தேன். ஒவ்வொரு கோயிலும் பூஜை செய்து கங்கா நதியில் புனித நீரை தொட்டேன். காசியில் உள்ள கோயிலை மிகவும் அற்புதமாக வைத்திருக்க நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். அதுமட்டுமின்றி எளிதாக யாரும் தரிசனம் செய்யும் வகையில் நீங்கள் செய்த நடவடிக்கை உண்மையிலேயே பாராட்டுக்குரியது. நீங்கள் செய்த இந்த மாற்றத்திற்காக கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்’ என தெரிவித்துள்ளார். ஆனால் இந்த டுவிட்டை அவர் ஒருசில நிமிடங்களில் டெலிட் செய்துவிட்டார்.
பிரதமர் மோடியை நடிகர் விஷால் பாராட்டு தெரிவித்து பின் திடீரென அந்த டுவிட்டை டெலிட் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout