காருக்குள் மர்மமான முறையில் மரணம் அடைந்த பிரபல நடிகர்.. போலீஸ் விசாரணை..!

  • IndiaGlitz, [Monday,November 20 2023]

’அய்யப்பனும் கோஷியும்’ உள்பட ஒரு சில மலையாள படங்களிலும் சில தமிழ் திரைப்படங்களிலும் நடித்த நடிகர் ஒருவர் மர்மமான முறையில் காரில் மரணம் அடைந்திருந்தது திரையுலகை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

’அய்யப்பனும் கோஷியும்’, ‘ஒருமுறை வந்து பார்த்தாயா’ ’ஹேப்பிங் வெட்டிங்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணச்சித்திர கேரக்டர்களில் நடித்தவர் பிரபல மலையாள நடிகர் வினோத் தாமஸ்.

இவர் சமீபத்தில் கோட்டயம் என்ற பகுதியில் தனியார் ஹோட்டலின் மதுபான விடுதி அருகே காரில் இருந்த நிலையில் அவரது கார் நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது.


இதனை அடுத்து அந்த விடுதியில் செக்யூரிட்டி கண்ணாடியின் கதவை தட்டியபோதிலும் உள்ளே இருந்து எந்த பதிலும் இல்லை. இதனை அடுத்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் விரைந்து வந்து கார் கண்ணாடியை உடைத்து பார்த்த போது உள்ளே நடிகர் வினோத் தாமஸ் பேச்சுமூச்சின்றி இருந்தார்.

உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியது கூறினர். இதனை அடுத்து போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் மட்டுமே அவரது மரணத்திற்கு காரணம் தெரியும் என்றும், அதன் பிறகு அடுத்த கட்ட விசாரணை நடக்கும் என்றும் காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.