பெண் பயணியிடம் அத்துமீறல்… சர்ச்சையில் மாட்டிய 'ஜெயிலர்' பட நடிகர் விநாயகன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
மலையாள சினிமாவில் வில்லன் மற்றும் முக்கிய வேடங்களில் நடித்து பிரபலமாக இருந்துவரும் நடிகர் விநாயகன் சக பெண் பயணியிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக கேரள உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டு இருப்பது கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மலையாள சினிமாவில் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் இருந்துவரும் விநாயகன் பல்வேறு திரைப்படங்களில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமாக இருந்து வருகிறார். அவர் தமிழ் சினிமாவில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ‘திமிரு’ திரைப்படத்தில் நடிகை ஷ்ரேயா ஷெட்டியின் அடியாள்களுள் ஒருவராக நடித்திருப்பார்.
அதேபோல நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'மரியான்' திரைப்படத்தில் வில்லனாக வந்து அசத்தியிருந்தார். தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீபன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழ், தெலுங்கு சினிமாவில் அறியப்பட்ட நடிகராக இருந்துவரும் விநாயகன் மீது தற்போது பரபரப்பு புகார் ஒன்று எழுந்துள்ளது.
கடந்த மே 27 ஆம் தேதி கோவாவில் இருந்து கொச்சிக்கு வருவதற்காக இண்டிகோ ஏர்லைன் விமானத்திற்காக ஒரு பெண் பயணி காத்திருந்ததாகவும் அப்போது செல்போனில் அவர் வீடியோ பார்த்துக் கொண்டிருந்ததை அடுத்து அங்கு வந்த நடிகர் விநாயகன் தன்னை வீடியோ எடுத்துவிட்டதாகத் தகராறில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அந்த விமான பயணியிடம் நடிகர் விநாயகன் அத்துமீறலில் ஈடுபட்டதை அடுத்து அவர் இண்டிகோ எர்லைன் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்த நிலையில் அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார். இதையடுத்து ஏர் சேவா போர்டெல் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் துணை செயலாளரைத் தொடர்பு கொண்டு அந்த பெண் பயணி தனக்கு நடந்த அத்துமீறல் குறித்து புகார் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தச் சம்பவத்தால் தனக்கு மனஉளைச்சல் ஏற்பட்டதாக அந்தப் பெண் பயணி கூறிய நிலையில் தற்போது கேரள உயர்நீதிமன்றத்தில் நடிகர் விநாயகன் மீது புகார் மனு பதிவுச் செய்யப்பட்டு உள்ளது.
ஏற்கனவே நடிகர் விநாயகன் அடிக்கடி சர்ச்சை வழக்குகளில் சிக்கி வரும் நிலையில் தற்போது சக பெண் பயணியிடம் அத்துமீறியதாகப் புகார் எழுந்திருப்பது கேரள சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com