பிரபல நடிகரை மணக்கும் பேட்மிண்டன் வீராஙகனை!

  • IndiaGlitz, [Saturday,June 13 2020]

விளையாட்டு துறையை சேர்ந்தவர்களும், திரையுலகை சேர்ந்தவர்களும் காதலித்து திருமணம் செய்த பல உதாரணங்கள் இருக்கும் நிலையில் தற்போது பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஒருவர் நடிகர் ஒருவரை திருமணம் செய்யவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தேசிய பேட்மிண்டன் வீராங்கனையும், சர்வதேச அளவில் ஓபன் பேட்மிண்டன் போட்டிகளில் கலந்து கொண்டவருமான வர்ஷா பெலவாடி என்ற வீராங்கனை, பிரபல கன்னட நடிகர் வினாயக் ஜோஷியை விரைவில் திருமணம் செய்யவுள்ளார்.

இதுகுறித்து வினாயக் ஜோஷி கூறியபோது, ‘வர்ஷாவை தனக்கு சிறுவயதில் தெரியும் என்றாலும், அவருடன் கடந்த 25 வருடங்களாக தொடர்பில் இல்லை. அதன்பின் இருவருக்கும் பொதுவான ஒரு நண்பரால் அறிமுகம் செய்யப்பட்டு அதன்பின் நட்பானோம் என்றும், இந்த நட்பு நாளடைவில் காதலாகி மாறியதாகவும் அதன்பின் இருவீட்டார் தரப்பினர் திருமணத்தை பேசி முடித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பேட்மிண்டன் ரேங்கில் 120வது இடத்தில் இருக்கும் வர்ஷா, தற்போது ஓய்வு பெற்று பேட்மிண்டன் பயிற்சி அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கன்னட திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன்பின் படிப்படியாக ஹீரோவாகி, தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருபவர் வினாயக் ஜோஷி என்பது குறிப்பிடத்தக்கது.