சின்ன பிள்ளை வேலையெல்லாம் விட்டு விட்டு பிழைக்கிற வழிய பாருங்க: விமல் வெளியிட்ட வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விமல் திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வதந்திகள் கிளம்பிய நிலையில் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் விமல், திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் தற்போது அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ’எனக்கு மாரடைப்பு எல்லாம் எதுவும் இல்லை, நான் முழு ஆரோக்கியத்துடன் நன்றாக இருக்கிறேன். தற்போது ’மைக்கேல்’ என்ற படத்தின் படப்பிடிப்பில் உள்ளேன். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் நான் மதுவுக்கு அடிமையாகி வீட்டில் ரகசிய சிகிச்சை எடுத்து வருவதாகவும் ஒரு வதந்தி பரவி வருகிறது. இந்த வேலைகளை எல்லாம் யார் செய்கிறார்கள் என்று எனக்கு தெரியும். என்னை காயப்படுத்த வேண்டும் என்பதற்காக அவ்வாறு செய்கிறார்கள். ஆனால் நான் காயப்பட மாட்டேன். இந்த சின்னப்பிள்ளை வேலை எல்லாம் விட்டுவிட்டு பிழைக்கிற வழியைப் பாருங்க, எங்களை வாழவிடுங்கள், நீங்களும் வாழுங்கள் என்று அந்த வீடியோவில் விமல் கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
'எனக்கு நெஞ்சுவலியா... யார் சொன்னது?' வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விமல்!#Vimal | #ActorVemal | #TamilCinema pic.twitter.com/joVbhTVZOF
— சினிமா விகடன் (@CinemaVikatan) January 7, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout