நடிகர் விமலின் மனைவி டாக்டரா? வைரலாகும் திருமண புகைப்படங்கள்

  • IndiaGlitz, [Wednesday,February 01 2023]

தமிழ் திரை உலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான விமலின் மனைவி ஒரு டாக்டர் என தற்போது தெரியவந்துள்ளதை அடுத்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

தமிழ் திரை உலகில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து அதன் பிறகு ’பசங்க’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விமல். அதன் பிறகு ’களவாணி’ ’தூங்கா நகரம்’, ‘எத்தன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த இவர் சமீபத்தில் நடித்த ’விலங்கு’ என்ற வெப்தொடர் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. தற்போது அவர் சுமார் ஏழு படங்களில் நடித்து வருகிறார் என்பதும் மீண்டும் விமலிற்கு திரைஉலகில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விமல் தனது உறவினர் பெண்ணான அக்சயா என்பவரை காதலித்து வந்தார். மெடிக்கல் கல்லூரி மாணவியான அக்சயாவுக்கு ஒரு டாக்டரை தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என அவரது பெற்றோர் விரும்பினர். ஆனால் விமல் மற்றும் அக்சயா இருவரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்ததால், அக்ஷயாவின் பெற்றோர் சம்மதம் இல்லாமல் முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் அக்சயா மருத்துவ கல்லூரி படிப்பை முடித்து டாக்டராகிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விமல்- அக்சயா தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் விமலின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

More News

'தளபதி 67' படத்தில் இணைந்த 8 பிரபலங்கள்.. இன்றும் தொடரும் அப்டேட்கள்..!

 தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 67' படத்தின் அப்டேட்டுகள் நேற்று மாலை முதல் ஒரு மணி நேரத்திற்கு ஒரு அப்டேட் வந்தது என்பதும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல் வெளியானது

தனது நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த விஜய் டிவி பிரியங்கா.. யார் இவர்?

 விஜய் டிவி பிரியங்கா தனது நண்பரை கட்டிப்பிடித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

பெற்றோர் ஆன அட்லி-ப்ரியா அட்லி.. என்ன குழந்தை தெரியுமா?

 தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அட்லியின் மனைவி ப்ரியா அட்லி கர்ப்பமாக இருந்த நிலையில் சற்றுமுன் அவருக்கு குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 

21 வருடங்களுக்கு முன் நான் பார்த்த அதே விஜய்; 'தளபதி 67' படத்தில் இணைந்த பிரபலம்!

தளபதி விஜய் நடித்துவரும் 'தளபதி 67' படத்தில் நடிக்க இருக்கும் நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்புகள் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை வெளியாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 

சிம்பு பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சிம்பு நடிப்பில்  உருவாகிய 'பத்து தல'  படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படம் வரும் மார்ச் 30 ஆம் தேதி வெளியாகும்