close
Choose your channels

சாமியை கொன்னுட்டேன்... விமல் நடித்த 'சார்' டீசர் ரிலீஸ்..!

Wednesday, June 19, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விமல் நடிப்பில், பிரபல குணச்சித்திர நடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவான ‘சார்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் முடிவடைந்த நிலையில் விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விமல் மற்றும் நாயகி சாயா ஆகிய இருவரும் கிராமத்தில் உள்ள ஒரே பள்ளிக்கூடத்தில் டீச்சராக வேலை பார்க்கும் நிலையில் இருவரும் காதலிக்கின்றனர். அப்போது அந்த கிராமத்தில் உள்ள பெரியவர்கள் சிலர் வில்லத்தனத்தில் அந்த பள்ளிக்கூடத்தை மூட சாமி பெயரை பயன்படுத்துகின்றனர்.

இதனை அடுத்து விமல் மற்றும் அவரது காதலி இருவரும் சேர்ந்து போராடி அந்த பள்ளிக்கூடத்தை எப்படி மீட்கிறார்கள் என்பது தான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் கிராமத்து வில்லனாக பிக்பாஸ் சரவணன் நடிப்பில் மிரட்டியுள்ளார்.

சாமி பெயரில் உள்ள மூட பழக்கவழக்கங்களை கொண்டு ஒரு கிராமத்தில் உள்ளவர்களை படிக்க விடாமல் செய்யும் கிராமத்து வில்லன்களை தோலுரித்து காட்டும் படமாக இந்த படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விமல், சாயா தேவி கண்ணன், சிராஜ், சரவணன், ரமா, ஜெயபாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகி உள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.