மணிரத்னம் காலத்தில் நானும் இருக்கிறேன் என்பதில் எனக்குப் பெருமை: சியான் விக்ரம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் நடித்த நடிகர் சியான் விக்ரம் பேசியதாவது:
’பொன்னியின் செல்வன்’ படத்தில் கரிகாலன் என்ற கேரக்டரில் நடிப்பது என்பது மிகவும் கஷ்டமான ஒரு காரியம். அந்த கஷ்டத்தை நான் ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு நடித்தேன். இந்த படத்தில் நடித்த போது எத்தனை பாடங்கள், எத்தனை கஷ்டங்கள், எத்தனை அனுபவங்கள் இருந்தது என்பதை எனக்கு தெரியும். நான் மட்டுமின்றி இந்த படத்தில் நடித்த எல்லோருமே மிகவும் கஷ்டப்பட்டு இந்த படத்தை ஒரு அன்பளிப்பாக உங்களுக்கு கொடுத்து இருக்கிறோம் .
இந்த படத்தின் முதல் பாகத்தை வேற லெவலில் வெற்றி அடைய செய்தீர்கள். அதற்கு மிக மிக நன்றி. ஆதித்த கரிகாலன் கேரக்டர் எனக்கு கிடைத்தது ஒரு கடவுளின் வரமாகவே நான் கருதுகிறேன். அவனுடைய வீரம், நட்பு, குடும்பத்தின் மேல் இருக்கும் பாசம், நந்தினி மேல் இருக்கும் காதல், அவ்ளோ பெரிய வீரனாக இருந்தாலும் கடைசியில் எதையும் மதிக்காமல் எல்லாத்தையும் துச்சமாக விட்டுவிட்டு சென்ற கேரக்டர். அந்த கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்தது. அதை நான் செய்தது மிகவும் பாக்கியமாக கருதுகிறேன்.
குறிப்பாக மணி சார் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய எனக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமாக கருதுகிறேன். மணி சார் அவர்கள் இருக்கும் காலத்தில் நானும் இருக்கிறேன், அவர் இருக்கிற சினிமாவில் நான் இருக்கிறேன், அவர் படத்தில் நானும் இருக்கிறேன் என்பது எனக்கு மிகப்பெரிய பெருமை.
அது போல் ரஹ்மான் சார் அவர்கள் இந்த படத்தில் மிகச் சிறப்பாக பாடல் அமைத்ததோடு மிக சிறப்பாக பின்னணி அமைத்துள்ளார். அவருக்கு எனது நன்றி. இந்த படத்தில் பணிபுரிந்து அனைத்து டெக்னீசியன்களுக்கும் எனது நன்றி. இது மாதிரி ஆடியன்ஸ் அனைவரையும் கொண்டு போய் ரீச் ஆகும் அளவுக்கு பிரமாண்ட படத்தை எடுத்த சுபாஷ்கரன் சார் அவர்களுக்கு எனது நன்றி’ என நடிகர் விக்ரம் பேசினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout