என் அம்மாவும் 'பொன்னியின் செல்வன்' பார்ப்பார்.. ரசிகரின் பதிவுக்கு பதிலளித்த நடிகர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் 30ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தை பார்க்க ஏராளமானோர் ஆர்வத்தில் இருந்தாலும் பொன்னியின் செல்வன் கதை முதன் முதலாக கல்கியில் வெளிவந்த போது ஆர்வத்துடன் படித்தவர்கள் இந்த படத்தை பார்க்க மிகுந்த ஆர்வத்துடன் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பல ஆண்டுகளாக திரையரங்கு பக்கமே செல்லாத 50 வயதுக்கும் மேலான்வர்கள் பலர் மீண்டும் திரையரங்குகளுக்கு வரவழைக்கும் படமாக ‘பொன்னியின் செல்வன்’ உள்ளது என்றால் அது மிகையில்லை.
இந்த நிலையில் ரசிகர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் மூத்த குடிமக்களுக்கு நட்பாக இருங்கள் என்றும் பல வருடங்களாக திரையரங்குக்கு வராத வயதானவர்கள் இந்த படத்தை பார்க்க வருகிறார்கள் என்றும் கடந்த 40 ஆண்டுகளில் தியேட்டருக்கு செல்லாத என் அம்மா கூட இந்த படத்தை பார்க்க விருப்பம் தெரிவித்து உள்ளார் என்றும் கூறியுள்ளார்.
இந்த பதிவிற்கு பதில் கூறியுள்ள நடிகர் விக்ரம், ‘ அன்பு அக்கறையும் கலந்த உங்கள் பதிவுக்கு நன்றி! நிறைய மகன்கள் மற்றும் மகள்கள் தங்களுடைய அம்மாவையும் அப்பாவையும் இந்த படத்தை பார்ப்பதற்காக திரையரங்கிற்கு அழைத்து வருவார்கள். என் அம்மாவையும் அழைத்து வருவேன் என்று கூறியுள்ளார். விக்ரமின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Thank you Hari for that lil note of love & concern.. a lot of sons & daughters will be bringing their proud moms & dads to watch their glorious history on the big screen.. my mother will be coming too.
— Aditha Karikalan (@chiyaan) September 28, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments