அஜித்துக்கு நன்றி சொன்ன அருண்விஜய்யின் தந்தை

  • IndiaGlitz, [Thursday,September 01 2016]

அருண்விஜய் குறித்து கடந்த இரண்டு நாட்களாக சர்ச்சைக்குரிய செய்திகள் வெளிவந்த நிலையில் இன்று அவர் நடித்த 'குற்றம் 23' படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடந்தது. இந்த விழாவில் அருண்விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் சிறப்பு விருந்தினர்களாக அருண்விஜய்யின் தந்தை விஜயகுமார், கெளதம் மேனன், ஜெயம் ரவி உள்பட பலர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய அனைவரது பேச்சிலும் அஜித்துடன் அருண்விஜய் நடித்த 'என்னை அறிந்தால்' படம் குறித்த கருத்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயகுமார்: 'என்னை அறிந்தால்' படத்தில் அருண்விஜய் நடித்தபோது அவருக்கு அஜித் நல்ல அறிவுரைகள் கூறி ஊக்குவித்ததோடு, அவர் மனதில் தன்னம்பிக்கையையும் வளர்த்துள்ளார். அதற்காக நான் அஜித்துக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்
அருண்விஜய்: அஜித்துடன் நான் நடித்த 'என்னை அறிந்தால்' திரைப்படம் என்னை வேற லெவலுக்கு எடுத்து சென்றது. தல அஜித்துக்கு நன்றி
கெளதம் மேனன்: 'என்னை அறிந்தால்' படத்தில் அருண்விஜய் கேரக்டரை வலிமைப்படுத்தி அவருக்கு முக்கியத்துவம் கொடுக்க அஜித்தே என்னிடம் கூறினார். அருண்விஜய் நான் எதிர்ப்பார்த்த நடிப்பை அற்புதமாக அந்த படத்தில் வெளிப்படுத்தினார்.
ஜெயம் ரவி: இளையதளபதி விஜய் அண்ணாவின் நடனத்தை அடுத்து அருண்விஜய் அண்ணாவின் டான்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்

More News

5 வருடங்களுக்கு பின் மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி?

பிரபல தயாரிப்பாளராக இருந்த உதயநிதியை கடந்த 2012ஆம் ஆண்டு 'ஒருகல் ஒருகண்ணாடி' படத்தின் மூலம் ஹீரோ ஆக்கியவர் எம்.ராஜேஷ்...

ஜெயம் ரவியின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு தேதி மற்றும் நேரம்

கோலிவுட் திரையுலகில் இளையதலைமுறை நடிகர்களில் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய ஜெயம் ரவி, தற்போது 'போகன்' படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். அரவிந்தசாமி...

'இருமுகன்' படத்திற்கு 'UA'சர்டிபிகேட் ஏன் தெரியுமா?

சீயான் விக்ரம் ஹீரோ, வில்லன் என இரண்டு அட்டகாசமான வேடங்களில் நடித்துள்ள 'இருமுகன்' வரும் செப்டம்பர் 8ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவரவுள்ளது...

ஜெயம் ராஜா-சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த புன்னகை அரசி

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'ரெமோ' படத்தின் ரிலிஸ் தேதியை அவருடைய ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில்...

ரஜினி, கமல், விஜய் இடத்திற்கு மகேஷ்பாபுவை அழைத்து செல்லும் முருகதாஸ்

இந்தியாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரும் தமிழ், இந்தி மொழிகளில் பல வெற்றி படங்களை இயக்கியவருமான ஏ.ஆர்.முருகதாஸ்