நாட்டாமை நடிகருக்கு நடுராத்திரியில் சர்பிரைஸ் கொடுத்த மகள்கள்… வைரல் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகராகவும் மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்து தனக்கென நீங்கா இடம்பிடித்தவருமான நடிகர் விஜய்குமார் தன்னுடைய பிறந்தநாளை நேற்று கொண்டாடியுள்ளார். அவருக்கு அவருடைய மகள்களான அனிதா, ஸ்ரீதேவி, ப்ரீத்தா ஆகிய 3 பேரும் சர்ப்ரைஸ் கொடுத்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய்குமார் கடந்த 1943 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 29 ஆம் தேதி தஞ்சாவூரில் பிறந்தவர். இவர் நடிகர் சிவாஜிகணேசன் நடித்த “ஸ்ரீவள்ளி“ திரைப்படத்தில் கடந்த 1961 ஆம் ஆண்டு அறிமுகமானார். அடுத்து ஒருசில திரைப்படங்களில் துணைக் கதாப்பாத்திரத்தில் நடித்த இவர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான “அவள்ஒரு தொடர்கதை” படத்தில் ஹீரோவாகவும் நடித்து இருந்தார்.
பின்னர் 70-80 களில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சிவக்குமார், ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, கார்த்திக், சத்யராஜ் எனப்பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் வில்லன், துணைக்கதாபாத்திரம், குணச்சித்திரம் எனப்பல கேரக்டரில் கலக்கிய நடிகர் விஜயக்குமார் கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான “கிழக்குச் சீமையிலே” திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதிலும் நிரந்தர இடம்பிடித்தார்.
அடுத்து 1994 ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான “நாட்டாமை” நடிகர் விஜய்குமாருக்கு இன்னொரு மைல்கல் படமாக அமைந்தது. இந்த நாட்டாமையை இன்றளவும் மறக்காத தமிழ் ரசிகர்கள் நடிகர் விஜயக்குமாரை சில நேரங்களில் நாட்டாமை என்றே அழைத்து வருவதும் பார்க்க முடிகிறது. இந்நிலையில் நடிகர் விஜயக்குமார் தன்னுடைய மகள்கள், பேரக் குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments