ரஜினி, கமலுக்கு கூட்டம் வரும், ஆனால் ஓட்டு வராது: தமிழ் நடிகர்!
- IndiaGlitz, [Saturday,December 26 2020]
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்னும் ஒரு சில மாதங்கள் மட்டுமே தேர்தலுக்கு இருப்பதால் கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி விட்டது
திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், உள்பட ஒருசில கட்சிகள் முதல்வர் வேட்பாளரை அறிவித்து விட்டு பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த தேர்தலில் புதிதாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரும் தனித்தனியாக களமிறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இருக்கும் திராவிட கட்சிகளை கமல், ரஜினி கட்சிகள் வெல்லுமா? என்பதை தேர்தல் முடியும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
இந்த நிலையில் ரஜினி, கமல் ஆகிய இருவரின் அரசியல் நிலைப்பாட்டுக்கு மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பும், அரசியல்வாதிகளிடம் மிகப்பெரிய எதிர்ப்பும் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரஜினி, கமல் ஆகிய இருவரின் அரசியல் குறித்து மறைந்த கன்னியாகுமரி எம்பியும் தொழிலதிபருமான வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் பேட்டி அளித்த போது ’ரஜினி கமல் ஆகிய இருவரும் மக்களை சந்திக்க வரும்போது அவர்களை பார்க்க வேண்டும் என்றுதான் கூட்டம் கூடுமே தவிர அது ஓட்டாக மாறாது என்று கூறினார். மேலும் ரஜினி ஆரம்பிக்கும் கட்சிக்கு இப்போது நேரம் சரியில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
ரஜினி கமல் அரசியல் குறித்தும் ரஜினியின் அரசியல் கட்சி குறித்தும் நடிகர் விஜய் வசந்த் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது