நடிகை தமன்னாவுடன் திருமணம் எப்போ? செய்தியாளர் கேள்விக்கு நடிகர் விஜய் வர்மாவின் பதில்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்துவரும் நடிகை தமன்னா பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் டேட்டிங் செய்வதாக அவ்வபோது தகவல்கள் வெளியாகி வந்தன. அதுகுறித்து விஜய் வர்மாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப அவர் அளித்திருக்கும் பதில் பலரையும் ஏமாற்றம் அடைய வைத்திருக்கிறது.
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை தமன்னா இதுவரை பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். ஏறக்குறைய இருமொழிகளிலும் பல முன்னணி நடிகர்களுடன் இவர் இணைந்து நடித்துவிட்ட நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் இணைந்துள்ளார். மேலும் பாலிவுட் சினிமாவிலும் தொடர்ந்து கவனம் செலுத்திவருகிறார்.
இந்நிலையில் நடிகை தமன்னா பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் டேட்டிங் செய்வதாக அவ்வபோது தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தத் தகவலை உறுதிப்படுத்தும் வகையில் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடிகை தமன்னா மற்றும் நடிகர் விஜய் வர்மா இருவரும் ஒன்றாக கோவா சென்றிருந்தனர். மேலும் அங்குள்ள உணவகம் ஒன்றிற்கு சென்றிருந்த நிலையில் இருவரும் லிப் கிஸ் கொடுத்துக் கொண்டது போன்ற புகைப்படங்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதேபோல மும்பை உணவகத்திற்கு இருவரும் ஒன்றாக சென்றதுபோன்ற புகைப்படங்களும் வெளியாகின. இதைத்தவிர நடிகை தமன்னா மற்றும் விஜய் வர்மா இருவரும் ஒன்றாக சேர்ந்து ஒருசில நிகழ்ச்சிகளிலும் ஒன்றாக கலந்து கொண்டனர். இந்நிலையில் இருவரும் டேட்டிங் செய்வதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. ஆனால் இந்தத் தகவலை இருவருமே உறுதிப்படுத்தவில்லை.
இந்நிலையில் அபுதாபியில் நடைபெற்ற சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் நடிகர் விஜய் வர்மா கலந்துகொண்டார். அப்போது அவரைச் சந்தித்த செய்தியாளர்கள் ஏதாவது நல்ல செய்தி உண்டா? என்று திருமணம் குறித்து கேள்வி எழுப்பி இருந்தனர். இந்தக் கேள்விக்கு பதிலளித்த நடிகர் விஜய் வர்மா விரைவில் நல்ல படத்தைக் கொடுக்க முயல்கிறேன் என்று கூறி தப்பித்துள்ளார். நடிகர் விஜய் வர்மா கூறிய இந்தப் பதில் ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com