விருது பெற்றதும் நடிகர் விஜய்சேதுபதி செய்த காரியம்… குவியும் பாராட்டு!

“சூப்பர் டீலக்ஸ்“ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகர் விஜய்சேதுபதி, துணைநடிகருக்கான தேசிய விருதினைப் பெற்றார். இந்த விருதை பெற்றவுடன் அந்தப் படத்தின் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக விருது வழங்கும் விழா தள்ளிவைக்கப்பட்டு தற்போது கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் “சூப்பர் டீலக்ஸ்“ படத்தில் “ஷில்பா“ எனும் கதாபாத்திரத்தில் திருநங்கையாக நடித்து சிறந்த பங்களிப்பை கொடுத்த நடிகர் விஜய்சேதுபதிக்கு சிறந்த துணைநடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

குடியரசு தலைவர் வெங்கைய நாயுடவிடம் இருந்து விருதைப் பெற்றுக்கொண்ட நடிகர் விஜய்சேதுபதி சென்னை திரும்பியவுடன் சூப்பர் டீலக்ஸ் படத்தை இயக்கிய இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவை நேரில் சந்தித்துள்ளார். அந்தச் சந்திப்பின்போது தேசிய விருதுக்காக அளிக்கப்பட்ட கடிதத்தினை இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா வாசித்துப்பின்பு அந்த விருதினை மீண்டும் நடிகர் விஜய்சேதுபதிக்கே கொடுக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரசிகர்களிடையே “மக்கள் செல்வன்“ என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜய்சேதுபதி தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்து தனது சிறந்த பங்களிப்பை செய்து வருகிறார். மேலும் ஹீரோ கேரக்டர் என்றில்லாமல் கதைக்காக எந்தக் கதாபாத்திரத்தையும் தேர்வு செய்யும் அசாத்தியத்தோடு அவர் வலம் வருவதும் ரசிகர்களிடையே கடும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

More News

ஜீன்ஸ் அணிந்ததற்காக இளம் பெண்ணுக்கு நடந்த அவலம்!

அசாம் மாநிலத்தில் பர்தா அணியாமல் ஜீன்ஸ் அணிந்துவந்த இளம் பெண்ணை கடைக்காரர்

'கோலமாவு கோகிலா', 'டாக்டர்' படம் போன்றதா 'பீஸ்ட்'?: நெல்சன் விளக்கம்!

இயக்குனர் நெல்சன் இயக்கிய 'கோலமாவு கோகிலா' மற்றும் 'டாக்டர்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் டார்க் காமெடி படங்கள் என்ற நிலையில் தற்போது அவர் இயக்கி வரும் 'பீஸ்ட்' படமும் அதே போன்ற ஒரு படமா

இன்றைய டாஸ்க்கின் முடிவில் தாமரை மலருமா? உலருமா?

அவங்களுக்கு மட்டும் தான் வாய் இருக்கா? எனக்கு வாய் இல்லையா? என இதுவரை அமைதியாக விளையாடிக்கொண்டிருந்த மதுமிதா திடீரென ஆவேசமாகி தாமரையுடன் சண்டை போட்ட காட்சிகளின் வீடியோ

பயமுறுத்தும் டெங்கு… பரவலைத் தடுக்க என்ன செய்யவேண்டும்?

ஆண்டுதோறும் பருவமழை காலத்தில் டெங்கு, சிக்கன்குனியா,

முதல்முறையாக சிவகார்த்திகேயன் படம் செய்த சாதனை!

தமிழ் திரையுலகை பொறுத்தவரை ரஜினி, கமல், அஜீத், விஜய் ஆகிய மாஸ் நடிகர்களின் படங்கள் மட்டுமே 100 கோடி கிளப்பில் இணைந்து உள்ள நிலையில் முதல் முறையாக சிவகார்த்திகேயன் படம் 100 கோடி கிளப்பில்