எங்கிருந்து எடுத்தேனோ அங்கேயே கொடுத்துவிட்டேன்: விஜய்சேதுபதியின் தன்னடக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சினிமாவை பொறுத்தவரை திரையில் தோன்றும் கதாநாயகன், கதாநாயகி போன்றவர்களை தான் பொது மக்களுக்கு அதிகம் தெரியும். ஆனால் அந்த சினிமாவை உருவாக்க பின்னணியில் நூற்றுக்கணக்கானோர் உயிரை பணயம் வைத்து பணி செய்தனர் என்பதும் அவர்கள் பெயர்கள் கூட பொதுமக்களுக்கு தெரியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் பொதுமக்களுக்கு தெரியாவிட்டால் பரவாயில்லை, அது சினிமாக்காரர்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும் என்பதால், அந்த பின்னணி கலைஞர்களை கெளரவித்து மரியாதை செய்ய வேண்டும் என்பதே அனைவருடைய விருப்பமாக இருந்தது.
அந்த வகையில் இயக்குனர் ஜெகந்நாதன் அவர்களின் உலகாயுதா என்ற அமைப்பு மூலம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் சினிமாவின் 100 மூத்த பின்னணி கலைஞர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கி கவுரவித்தது. ஒரு பதக்கம் ஒரு சவரன் வீதம் 100 சவரன் தங்க பதக்கத்திற்கான செலவை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஏற்றுக்கொண்டார் என்பதும் அவரே தன் கைப்பட அனைவருக்கும் பதக்கத்தை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நான்கு வருடங்களுக்கு முன் தமிழ் சினிமா 100வது ஆண்டை கொண்டாடிய நிலையில் விஜய் சேதுபதியின் இந்த செயல் இன்றும் அனைவராலும் பாராட்டி போற்றப்பட்டு வருகிறது. அந்த விழாவில் விஜய்சேதுபதி பேசியபோது ’இந்த விழாவில் நான் கலந்து கொண்டு மூத்த சினிமா பின்னணி கலைஞர்களை கெளரவிப்பதை ஒரு பாக்கியமாக கருதுகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த எஸ்பி ஜனநாதன் அவர்களுக்கு எனது நன்றி. பின்னணி கலைஞர்கள் இல்லை என்றால் நாங்கள் இல்லை. எனக்கு பெயர், புகழ், பணம் எல்லாம் எங்கிருந்து கிடைத்ததோ, அங்கேயே நான் கொடுத்து உள்ளேன் என்றும் அவர் தெரிவித்தது தன்னடக்கத்தை உச்சகட்டமாக தெரிந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments