எங்கிருந்து எடுத்தேனோ அங்கேயே கொடுத்துவிட்டேன்: விஜய்சேதுபதியின் தன்னடக்கம்!

  • IndiaGlitz, [Friday,February 19 2021]

சினிமாவை பொறுத்தவரை திரையில் தோன்றும் கதாநாயகன், கதாநாயகி போன்றவர்களை தான் பொது மக்களுக்கு அதிகம் தெரியும். ஆனால் அந்த சினிமாவை உருவாக்க பின்னணியில் நூற்றுக்கணக்கானோர் உயிரை பணயம் வைத்து பணி செய்தனர் என்பதும் அவர்கள் பெயர்கள் கூட பொதுமக்களுக்கு தெரியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் பொதுமக்களுக்கு தெரியாவிட்டால் பரவாயில்லை, அது சினிமாக்காரர்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும் என்பதால், அந்த பின்னணி கலைஞர்களை கெளரவித்து மரியாதை செய்ய வேண்டும் என்பதே அனைவருடைய விருப்பமாக இருந்தது.

அந்த வகையில் இயக்குனர் ஜெகந்நாதன் அவர்களின் உலகாயுதா என்ற அமைப்பு மூலம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் சினிமாவின் 100 மூத்த பின்னணி கலைஞர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கி கவுரவித்தது. ஒரு பதக்கம் ஒரு சவரன் வீதம் 100 சவரன் தங்க பதக்கத்திற்கான செலவை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஏற்றுக்கொண்டார் என்பதும் அவரே தன் கைப்பட அனைவருக்கும் பதக்கத்தை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நான்கு வருடங்களுக்கு முன் தமிழ் சினிமா 100வது ஆண்டை கொண்டாடிய நிலையில் விஜய் சேதுபதியின் இந்த செயல் இன்றும் அனைவராலும் பாராட்டி போற்றப்பட்டு வருகிறது. அந்த விழாவில் விஜய்சேதுபதி பேசியபோது ’இந்த விழாவில் நான் கலந்து கொண்டு மூத்த சினிமா பின்னணி கலைஞர்களை கெளரவிப்பதை ஒரு பாக்கியமாக கருதுகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த எஸ்பி ஜனநாதன் அவர்களுக்கு எனது நன்றி.  பின்னணி கலைஞர்கள் இல்லை என்றால் நாங்கள் இல்லை. எனக்கு பெயர், புகழ், பணம் எல்லாம் எங்கிருந்து கிடைத்ததோ, அங்கேயே நான் கொடுத்து உள்ளேன் என்றும் அவர் தெரிவித்தது தன்னடக்கத்தை உச்சகட்டமாக தெரிந்தது.

More News

விவசாயிகளின் நலனுக்காக 10 இடங்களில் பிரம்மாண்ட சந்தை- முதல்வர் அதிரடி அறிவிப்பு!

விவசாயிகளின் நலனுக்காக 10 மாவட்ட தலைநரங்களில் 20 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட சந்தை உருவாக்கப்படும்

ஒரு தவறுக்காக ஒதுக்கப்பட்ட வீரர்… ஐபிஎல் ஏலத்தில் நடந்த சோகம்!

இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹேல்ஸ். மிகச் சிறந்த பேட்டிங் வீரரான இவர் தற்போது டி20 போட்டி மற்றும் அந்நாட்டின் உள்ளூர் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்.

கடல் நடுவே அந்தரத்தில் பிகினியில் கலக்கும் சூர்யா-கார்த்தி பட நடிகை!

சூர்யா நடித்த 'என்ஜிகே' கார்த்தி நடித்த 'தேவ்' மற்றும் 'தீரன் அதிகாரம் ஒன்று' உள்பட பல தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் நடித்த முன்னணி நடிகைகளில் ஒருவர் ரகுல் ப்ரீத்தி சிங்.

பிக்பாஸ் கமல்ஹாசனுக்கு பெருமை சேர்க்கும் சென்னை புத்தக கண்காட்சி!

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சி நடைபெறும் என்பதும் இந்த கண்காட்சியை காண்பதற்கு ஆயிரக்கணக்கானோர் குவிந்து வருவார்கள் என்பதும் தெரிந்தது 

மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்த அர்ஜுன் டெண்டுல்கர்!

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெஷ்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.