பிரபல நடிகை-அரசியல்வாதியுடன் லஞ்ச் சாப்பிட்ட விஜய்சேதுபதி: வைரல் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Sunday,January 17 2021]

பிரபல நடிகை மற்றும் அரசியல்வாதியுடன் நடிகர் விஜய் சேதுபதி லஞ்ச் சாப்பிட்டதாக பதிவு செய்யப்பட்ட டுவீட் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

சமீபத்தில் தளபதி விஜய்யுடன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் வசூலில் சக்கைபோடு போட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி பல திரையுலக பிரமுகர்களும் பார்த்து பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் ’மாஸ்டர்’ படத்தை திரையரங்கில் பார்த்த நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு நீண்ட இடைவேளைக்குப் பின் திரையரங்குகளில் படம் பார்ப்பது பெருமையாக இருப்பதாகவும் அதிலும் விஜய் படத்தை திரையரங்கில் பார்க்கும் போது கிடைக்கும் பெரும் பெருமிதத்தை விட வேறு என்ன வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் ’மாஸ்டர்’ திரைப்படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த விஜய் சேதுபதியுடன் இன்று லஞ்ச் சாப்பிட்டதாகவும் அவருடன் லஞ்ச்சை பகிர்ந்துகொண்டு சாப்பிட்டது, சாதாரண ஒரு நாளை ஸ்பெஷல் நாளாக மாற்றிவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் விஜய்சேதுபதியுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் என்பதும் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.