பண உதவி தேவைப்பட்டால் என்னிடம் கேளுங்கள்: ரசிகர்களை நேரில் அழைத்து பாராட்டிய விஜய்..!

  • IndiaGlitz, [Friday,April 28 2023]

விஜய் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் விலையில்லா விருந்து திட்டம் என்ற திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்தி வரும் ரசிகர்களை சென்னைக்கு வரவழைத்து விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய்யின் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு சமூக நல சேவைகளை செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பாக இயற்கை பேரிடரின் போது விஜய் ரசிகர்கள் தான் முதலில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவி செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக விஜய் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் விலையில்லா விருந்து திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் ரசிகர்கள் 300 பேரை சென்னைக்கு வரவழைத்த விஜய் அவர்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். மேலும் இந்த திட்டத்தை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்றும் விலையில்லா விருந்து திட்டம் என்ற உணவு வழங்கும் திட்டத்தை எந்த காரணத்தை முன்னிட்டும் நிறுத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் இதற்காக பணம் தேவைப்பட்டால் என்னிடம் கேளுங்கள், நான் உதவி செய்கிறேன் என்று கூறிய விஜய் அடுத்தடுத்து இந்த திட்டத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க ஒத்துழைப்பு தருமாறும் ரசிகர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.