விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம்: உண்மையான ஹீரோக்களாக இருக்க நீதிமன்றம் அறிவுரை!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விஜய்க்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இங்கிலாந்து நாட்டிலிருந்து கடந்த 2012ஆம் ஆண்டு நடிகர் விஜய் ரோல்ஸ்ராய்ஸ் கார் ஒன்றை இறக்குமதி செய்தார். இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கேட்டு நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டது
இந்த தீர்ப்பில் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விதிக்க தடை கேட்டு நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டதாக நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தீர்ப்பளித்தார். மேலும் நடிகர் விஜய்க்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்ததோடு, நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும் என்றும், சினிமா ஹீரோக்கள் நிஜ வாழ்வில் ஹீரோக்களாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்
மேலும் சமூக நீதிக்காக பாடுபடுவதாக கூறிக்கொள்ளும் நடிகர்கள் வரிஏய்ப்பு செய்வதை ஏற்க முடியாது என்றும் அவர் கூறிய நீதிபதி, வரி செலுத்துவது என்பது நன்கொடை கொடுப்பது போன்றது அல்ல என்றும் ஒவ்வொரு குடிமகன்களும் செய்யவேண்டிய கட்டாய பங்களிப்பு என்றும் அந்த தீர்ப்பில் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout