விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம்: உண்மையான ஹீரோக்களாக இருக்க நீதிமன்றம் அறிவுரை!

  • IndiaGlitz, [Tuesday,July 13 2021]

நடிகர் விஜய்க்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இங்கிலாந்து நாட்டிலிருந்து கடந்த 2012ஆம் ஆண்டு நடிகர் விஜய் ரோல்ஸ்ராய்ஸ் கார் ஒன்றை இறக்குமதி செய்தார். இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கேட்டு நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டது

இந்த தீர்ப்பில் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விதிக்க தடை கேட்டு நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டதாக நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தீர்ப்பளித்தார். மேலும் நடிகர் விஜய்க்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்ததோடு, நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும் என்றும், சினிமா ஹீரோக்கள் நிஜ வாழ்வில் ஹீரோக்களாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்

மேலும் சமூக நீதிக்காக பாடுபடுவதாக கூறிக்கொள்ளும் நடிகர்கள் வரிஏய்ப்பு செய்வதை ஏற்க முடியாது என்றும் அவர் கூறிய நீதிபதி, வரி செலுத்துவது என்பது நன்கொடை கொடுப்பது போன்றது அல்ல என்றும் ஒவ்வொரு குடிமகன்களும் செய்யவேண்டிய கட்டாய பங்களிப்பு என்றும் அந்த தீர்ப்பில் கூறியுள்ளார்.
 

More News

வார்த்தை வித்தகன்...! வரிகளில் வசியம் செய்யும் வைரமுத்துவிற்கு பிறந்தநாள் வாழ்த்து....!

கவிதை என்றாலே வைரமுத்து, வைரமுத்து என்றாலே தமிழ்ப்பற்று என தமிழ்நெஞ்சுகளில் நீங்கா இடம்பிடித்திருப்பவர்,

சென்னை கார்பரேஷன் பள்ளிகளில் புது புரட்சி… ஏட்டுக் கல்விக்கு மாற்றாக மாஸ் அறிவிப்பு!

நம்முடைய கல்வி முறையில் அனுபவ அறிவு குறைவாக இருக்கிறது என்பதுபோன்ற குற்றச்சாட்டு தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

சசிகலாவிடம் பலமுறை சொல்லிவிட்டேன்...! இது அவமானகரமானது.....சீமான் கருத்து....!

ஆடியோ அரசியல் பற்றி சசிகலாவிடம் பலமுறை சொல்லிவிட்டேன், ஆனால் நாகரிகமில்லாமல் அவர் நடந்துகொள்கிறார் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்

பாக்சிங் என்ன உன் அப்பன் வீட்டு சொத்தா? 'சார்பாட்டா' டிரைலர்!

ஆர்யா நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'சார்பாட்டா பரம்பரை என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து சமீபத்தில் அமேசான் ஓடிடியில் ரிலீஸாகும்

ஆண் உறுப்பை பெரிதாக்க வேண்டுமா? Expert கூறும் பெஸ்ட் அட்வைஸ்!

உலகத்தில் உள்ள பெரும்பாலான ஆண்களுக்கு ஆணுறுப்பின் அளவு பற்றிய கவலை இருக்கத்தான் செய்கிறது.