அப்பீல் செய்யப்போகிறாரா விஜய்? சட்டவல்லுனர்களுடன் ஆலோசனை என தகவல்!

  • IndiaGlitz, [Thursday,July 15 2021]

தளபதி விஜய் தான் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரிவிலக்கு கேட்டு பதிவு செய்த வழக்கில் நீதிபதி அவருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்ததுடன் கடுமையாக விமர்சனம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நீதிபதியின் ஆட்சேபனைக்குரிய கருத்து சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வரி விலக்கு கோரி வழக்கு பதிவு செய்வது ஒவ்வொரு குடிமகனின் உரிமை என்றும் அந்த மனுவை நீதிபதி ஏற்றுக் கொள்ளலாம் அல்லது தள்ளுபடி செய்து அபராதம் விதிக்கலாம் என்றும் அதையும் தாண்டி அவர் விஜய் குறித்து தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்தது தேவையில்லாதது என்று பலர் கருத்து கூறி வருகின்றனர். இது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்கள் கூறிய கருத்தையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தன் மீது சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக நடிகர் விஜய் மேல்முறையீடு செய்யப் போவதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து வருவதாகவும் விரைவில் அப்பீல் செய்வது குறித்து முடிவு எடுப்பார் என்றும் கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே நடிகர் விஜய்க்கு சீமான், கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்ட அரசியல்வாதிகளும் பல திரையுலக பிரபலங்களும் ஆதரவு தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சூர்யா-வெற்றிமாறனின் 'வாடிவாசல்' படத்தின் வேற லெவல் அப்டேட்!

சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'வாடிவாசல்' திரைப்படத்தின் வேற லெவல் அப்டேட் ஒன்று சற்றுமுன் வெளியாகியுள்ளதை அடுத்து சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில்

கஷ்டங்களை மட்டுமே பார்த்தவர்கள் அம்மா-அப்பா: புகழின் நெகிழ்ச்சியான பதிவு!

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 1 மற்றும் சீசன் 2 நிகழ்ச்சிகளில் மூலம் வேற லெவலில் பிரபலமானவர் புகழ் என்பது தெரிந்ததே.

என் முன்னால் சிக்கன் பிரியாணி இருந்தால் இப்படித்தான் பார்ப்பேன்: கிளாமர் பார்வையில் மாளவிகா மோகனன்

கிளாமர் உடை மற்றும் பார்வையுடன் போஸ் கொடுத்துள்ள நடிகை மாளவிகா மோகனன், என் முன் சிக்கன் பிரியாணி இருந்தால் இப்படித்தான் பார்ப்பேன் என்று பதிவு செய்துள்ளது வைரலாகி வருகிறது.

நாய்க்குட்டியுடன் நடிகை ரம்பா: வைரல் புகைப்படங்கள்!

நடிகை ரம்பா தனது செல்ல நாய் குட்டி உடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிட்ட நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன 

சினிமா பின்புலம் இல்லாதவர்களுக்காக இதை செய்கிறேன்.....! டாப்ஸி புது முயற்சி.....!

முன்னணி நடிகையான டாப்ஸி, சினிமாவில் பின்புலம் இல்லாதவர்களுக்காக, புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார்.