ரோல்ஸ்ராய் கார் வரி வழக்கு: விஜய் வழக்கறிஞரின் காரசாரமான வாதம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விஜய் வெளிநாட்டிலிருந்து ரோல்ஸ் ராய் கார் இறக்குமதி செய்த போது அந்த காருக்கான நுழைவு வரி கட்ட வேண்டும் என அரசு தரப்பில் கூறப்பட்டது. இதனை எதிர்த்து விஜய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி அவருக்கு ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்ததோடு, விஜய் குறித்து ஒரு சில சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் தெரிவித்தார்.
இந்த நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட ரூபாய் ஒரு லட்சம் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், தன்னைப் பற்றி தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்க வேண்டும் என்றும் விஜய் தரப்பிலிருந்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு, வரி வழக்குகள் குறித்து விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றப்பட்டது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் சற்று முன் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணையின்போது நடிகர் விஜய் தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் அவர்கள் ‘வரி குறித்த வழக்கில் ஒருவர் என்ன தொழில் செய்கிறார் என்பதை சொல்ல வேண்டியது தேவையற்றது என்றும், வரி முறை குறித்து விளக்குங்கள் என்று நாங்கள் மனு தாக்கல் செய்யவில்லை என்றும் கூறினார்
மேலும் நடிகர்களுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை நீதிபதி பயன்படுத்தி உள்ளார் என்றும் கடுமையான வார்த்தைகள் மூலம் தேச விரோதி போல சித்தரித்தது அவசியமற்றது என்றும் தெரிவித்துள்ளார்
மேலும் நடிகர்களை கொச்சைப்படுத்தும் வகையில் தனி நீதிபதியின் உத்தரவு உள்ளது என்றும் ஆயிரக்கணக்கானோர் இதே கோரிக்கையுடன் வழக்கு தொடர்ந்த நிலையில் நடிகர் விஜய் மீது மட்டும் தேவையற்ற விமர்சனம் வைக்கப்பட்டது ஏற்புடையதல்ல என்றும், நீதிமன்றம் உத்தரவிட்டால் ஒரு வாரத்தில் வரி செலுத்தவும் தயார் என்றும் விஜய் தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் கூறினார்
இதனை அடுத்து அரசு தரப்பின் வாதம் முடிந்த பிறகு இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது
நடிகர்களை கொச்சைப்படுத்தும் வகையில் தனி நீதிபதியின் உத்தரவு உள்ளது. ஆயிரக்கணக்கானோர் இதே கோரிக்கையுடன் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், நடிகர் விஜய் மீது மட்டும் தேவையற்ற விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது ஏற்புடையதல்ல - நடிகர் விஜய் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதம்!
— Prem ?? (@premjourn) July 27, 2021
என்ன தொழில் செய்கிறேன் என்று சொல்வது தேவையற்றது
— Raja Shanmugasundaram (@SRajaJourno) July 27, 2021
- விஜய் pic.twitter.com/jZExLrK9um
நான் தேச விரோதியா...?
— Raja Shanmugasundaram (@SRajaJourno) July 27, 2021
- நடிகர் விஜய் pic.twitter.com/9v5aLfH1Ww
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com