விஜய்யால் எம்ஜிஆர் இடத்தை நிரப்ப முடியுமா? அமைச்சர் ஜெயகுமார் பதில்

தளபதி விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாகவும் அதுகுறித்து அவரது தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் வழக்கறிஞர்களிடம் ஆலோசனை செய்து வருவதாகவும் ஒரு பக்கம் தகவல் வெளிவந்து கொண்டிருக்கின்றன

இன்னொரு பக்கம் எம்ஜிஆரை போலவே விஜய்யை உருவகப்படுத்தி அவரது ரசிகர்கள் மதுரை உள்பட ஒரு சில நகரங்களில் போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். எம்ஜிஆர் நடித்த இதயகனி, ரிக்சாக்காரன், உரிமைக்குரல் உள்ளிட்ட போஸ்டர்களை போலவே விஜய்யின் போஸ்டர்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த போஸ்டர்களால் எம்ஜிஆரின் இடத்தை விஜய் நிரப்பி விடுவாரோ என்ற கேள்வி பலரது மனதில் எழுந்துள்ளது

இந்த நிலையில் நடிகர் விஜய்யின் போஸ்டர் குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பிய போது அவர் இதுகுறித்து கூறியதாவது: நடிகர் விஜய்யால் எம்ஜிஆரின் இடத்தை நிரப்ப முடியாது. எல்லோரும் எம்ஜிஆர், ஜெயலலிதா போல் மாறிவிட முடியாது என்று பதிலளித்துள்ளார். அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

கொரோனா பரிசோதனையில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் தமிழகம்!!! முதல்வரின் அதிரடி நடவடிக்கைகள்!!!

தமிழகத்தில் (ஆகஸ்ட் 6) ஒரேநாளில் 80 ஆயிரத்து 864 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது

திரையரங்குகள் திறப்பது எப்போது? மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து பொதுமக்கள் ஸ்தம்பித்துப் போய் இருந்தனர்.

பொதுமக்களால் தாக்கப்பட்டாரா 'கோமாளி' பட நடிகை: வைரலாகும் வீடியோ

ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. இவர் அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள்

அடுத்த எம்ஜிஆர் ஆகிறாரா விஜய்? ரசிகர்களின் போஸ்டர்களால் பரபரப்பு

பொதுவாக போஸ்டர் போர் அரசியல்வாதிகளுக்கு இடையில்தான் நடைபெற்று வரும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மாஸ் நடிகர்களின் ரசிகர்கள் இடையேயும் நடந்து வருகிறது.

தமிழகத்தில், பொதுஇடங்களில் மாக்ஸ் அணியாவிட்டால்… எச்சில் துப்பினால் அபராதம்… எவ்வளவு தெரியுமா???

தமிழகத்தில் மாஸ்க் அணியாமல் பொதுஇடங்களில் நடமாடினாலோ அல்லது பொதுஇடங்களில் எச்சில் துப்பினாலோ அபராதம் விதிக்கப்படும் என தமிழக அதிரடி அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது