சைக்கிளில் வந்து வாக்களித்த தளபதி விஜய்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தல அஜித், நடிகர் சூர்யா கார்த்தி உள்பட பலர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் சற்றுமுன் வாக்களிக்க வந்தார். அவர் தனது வீட்டிலிருந்து வாக்குச்சாவடி வரை சைக்கிளில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
விஜய்யை பார்த்தவுடன் அவரது ரசிகர்கள் அவரை சூழ்ந்துகொண்டு செல்பி எடுக்க முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு பாதுகாப்புக்கு இருந்த காவல்துறையினர் நடிகர் விஜய்யை பாதுகாப்பாக அழைத்துச் சென்று வாக்களிக்க செய்தனர். வாக்குப் பதிவு செய்யும் மையத்தின் உள்ளேயும் ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கேமராவுடன் வந்து விஜய்யை புகைப்படம் எடுத்ததால் அந்த பகுதியில் சில நிமிடங்கள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது
இருப்பினும் காவல்துறையினர் பாதுகாப்பாக விஜய்யை வாக்களிக்க செய்து, அவரை அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக நீலாங்கரை வாக்குப்பதிவு மையத்தில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது
#ThalapathyVijay Pedals His Way To Casts His Vote!!!!#TNElection #TNElections2021 #TNElection2021 #TNAssemblyElections2021 #tnelectionday #Election2021 #Elections2021 #Thalapathy #Vijay #thalapathyfansteam @actorvijay @Jagadishbliss @BussyAnand @V4umedia_ pic.twitter.com/3xDff5iJ6Z
— RIAZ K AHMED (@RIAZtheboss) April 6, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments