கார் நுழைவு வரி வழக்கு: சூர்யா, தனுஷூக்கும் ஆதரவாக நீதிமன்றத்தில் வாதாடிய விஜய்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய்யின் ஆடம்பர கார் வரி குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது தனக்கு மட்டுமின்றி சூர்யா மற்றும் தனுஷ் ஆகியோர்களுக்காகவும் விஜய் தரப்பில் விஜய் தரப்பில் வாதாடிய தகவல் வெளிவந்துள்ளது.
தளபதி விஜய் அவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சொகுசு கார் வாங்கிய நிலையில் அந்த காருக்கு நுழைவு வரி விலக்கு கோரிய வழக்கு தனி நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி விஜய் குறித்து சர்ச்சைக்குரிய சில கருத்துக்களையும் நீதிபதி கூறியதை அடுத்து நீதிபதியின் கருத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் தரப்பினர் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘வழக்கு ஆவணங்களில் தொழில் குறிப்பிடப்படவில்லை என நீதிபதி கூறியுள்ளதாகவும் வழக்கு ஆவணங்களில் தொழில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும், நுழைவு வரி செலுத்தாமல், வரி செலுத்துவதை தவிர்க்க வழக்கு தொடர இருப்பதாகவும் கூறியிருப்பது தேவையற்ற கருத்துக்கள் என்றும், கஷ்டப்பட்டு உழைத்த பணத்தில் வாங்கப்பட்ட கார் என்ற நிலையில் அதை நீதிபதி விமர்சனம் செய்திருப்பது தேவையற்றது என்றும் வாதாடினார்.
மேலும் நடிகர்கள் தனுஷ் மற்றும் சூர்யா வழக்கிலும் இதே போன்ற கருத்துக்கள் பதிவு செய்திருப்பதாகவும், சட்டவிரோதமாக வழக்குப் பதிவு செய்யவில்லை என்றும், வரி விலக்கு கோருவது என்பது சட்டபூர்வமான நடவடிக்கை என்பதால்தான் வழக்கு தொடர்ந்ததாகவும் விஜய்யின் வழக்கறிஞர் வாதாடினார்.
மேலும் வரி ஏய்ப்பு செய்ய வேண்டிய அவசியம் விஜய் அவர்களுக்கு இல்லை என்றும் நிலுவைத் தொகையான 32 லட்சத்து 30 ஆயிரத்தை ஆகஸ்டு 7ஆம் தேதியை செலுத்தி விட்டதாகவும் நீதிபதி கூறிய கருத்துக்கள் தன்னை தனிப்பட்ட முறையில் புண்படுத்தி விட்டதாக விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டதாகவும் இந்த வழக்கு மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments