தேங்க்யூ தம்பி: சிவகார்த்திகேயனுக்கு நன்றி சொன்ன விமல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விமல் தனது சமூக வலைத்தளத்தில் சிவகார்த்திகேயனுக்கு ’தேங்க்யூ தம்பி’ என்று பதிவு செய்திருப்பதை அடுத்து அந்த பதிவிற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.
நடிகர் விமல் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’விலங்கு’ என்ற வெப்தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் விமல் காவல்துறை அதிகாரியாக இந்த தொடரில் சிறப்பாக நடித்திருந்தார் என்பதும், ஒரு கிராமத்தில் நடக்கும் தொடர் கொலையை கண்டுபிடிக்கும் காவல்துறை அதிகாரி கேரக்டருக்கு கச்சிதமாக விமல் பொருந்தி இருந்தார் என்றும் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தன. மேலும் இந்த படத்தில் கடைசி வரை கொலையாளி யார் என்ற சஸ்பென்ஸ் கொண்டுசெல்லப்பட்டதற்கு இயக்குனருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் விமல் நடித்த நடித்த ’விலங்கு’ வெப்தொடரை சமீபத்தில் பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் தனது வாழ்த்துக்களை படக்குழுவினர்களுக்கு தெரிவித்துள்ளார். ’விலங்கு’ தொடரில் நடிப்பு, உருவாக்கம், திரைக்கதை, ஒளிப்பதிவு, இசை ஆகிய அனைத்துமே மிகவும் சிறப்பாக இருந்தது என்றும் குறிப்பாக விமலின் நடிப்பும் பிரசாந்தின் இயக்கமும் மிகவும் சிறப்பாக இருந்தது என்றும் படக்குழுவினர் அனைவருக்கும் தனது நன்றியை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் பாலசரவணன் மற்றும் கிச்சா ஆகியவர்களுக்கு தனது சிறப்பு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் சிவகார்த்திகேயன் கூறியிருந்தார். சிவகார்த்திகேயனின் இந்த பதிவுக்கு நடிகர் விமல் ’தேங்க்யூ தம்பி’ என்று தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
விமல் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய இருவரும் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ என்ற படத்தில் இணைந்து நடித்தனர் என்பதும், அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் அனைவரும் அறிந்ததே,.
Thank u thambi ☺️ https://t.co/GoK0vjqFtF
— Actor Vemal (@ActorVemal) March 7, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com