ஐபிஎல் கிரிக்கெட் போல இனி ஜல்லிக்கட்டு லீக். நடிகர் வீரா
- IndiaGlitz, [Friday,January 20 2017]
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சிம்பு தனது வீட்டின் முன் நேற்று முன் தினம் இரவு முதல் அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வருகிறார். அவருடன் பலரசிகர்களும் நடிகர்களும் உட்கார்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் வீரா இந்த போராட்டத்தின்போது பேசியதாவது: முதலில் பீட்டாவுக்கு நாங்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் மத்தியில் நடந்து வந்த ஜல்லிக்கட்டு, பீட்டாவால் ஏற்படுத்தப்பட்ட தடை காரணமாக இனி தமிழகம் முழுவதும் ஐபில் லீக் போல லட்சக்கணக்கானோர் மத்தியில் நடைபெறும். இனி ஜல்லிக்கட்டை தமிழகர்கள் நேரிலும் டிவியிலும் இண்டர்நெட்டிலும் பார்ப்பார்கள். ஜல்லிக்கட்டு என்பது சிம்பு படம் போல. தடை விதிக்க விதிக்கத்தான் அதன் பாப்புலாரிட்டி கூடும்.
இன்னிக்கு ஜல்லிகட்டு நடத்தக்கூடாது என்று சொல்வார்கள். நாளை பொங்கலை தெருவில் வைக்கக்கூடாது, வீட்டுக்குள் வைக்கணும்ன்னு சொல்லுவாங்க, அப்புறம் பட்டுச்சேலை கட்டக்கூடாதுன்னு சொல்லுவாங்க, அம்மாவை மம்மின்னு கூப்பிடணும்ன்னு சொல்வாங்க, அப்புறம் தமிழ்ல்ல பேசினா வரி கட்டணும்ன்னு சொல்வாங்க. எங்க கலாச்சாரத்தை காப்பாற்ற யாரும் வரவேண்டாம், எங்களுக்கு எங்கள் கலாச்சாரத்தை காப்பற்ற தெரியும்
எங்களை ஒன்றிணைத்த பீட்டாவுக்கு நன்றி , இனி IPL போல் இங்கு இந்தியன் #ஜல்லிக்கட்டு லீக் நடைபெறும் - நடிகர் வீரா !! #Veera pic.twitter.com/wCQTCeLcIF
— FridayCinemaa (@FridayCinemaa) January 19, 2017