நடிகர் வைபவ் 25வது படம்.. டைட்டிலை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் வைபவ் திரையுலகில் 25வது படம் என்ற மைல்கல்லை எட்டிய நிலையில் இந்த படத்தின் டைட்டிலை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கிய ’சரோஜா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் வைபவ். அதன் பிறகு அவர் ’கோவா’’ ஈசன்’ ’மங்காத்தா’ ’பிரியாணி’ ’பிரம்மன்’ உட்பட பல திரைப்படங்களில் நடித்தார். ‘கப்பல்’ என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்த அவர் அதன் பிறகு ஒரு சில படங்களில் நாயகனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வைபவ் நடிக்கும் 25 வது திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்கு ’ரணம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அட்டகாசமாக உள்ளதை அடுத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஷெரீப் இயக்கத்தில் உருவாகும் என்று படத்திற்கு அரோல் கரோலி இசையமைக்கின்றார். பாலாஜி ராஜா ஒளிப்பதிவில் முனீஸ் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை மிதுன் மித்ரா புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. நடிகர் வைபவ் ஜோடியாக நந்திதா ஸ்வேதா நடிக்கும் இந்த படத்தில் தன்யா ஹோப் இன்னொரு நாயகியாக நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Excited to reveal The First Look Poster of #Vaibhav25 #Ranam_AT directed by @SheriefDirector
— karthik subbaraj (@karthiksubbaraj) April 16, 2023
Best wishes to @MMProductions22 team for a grand success.@actor_Vaibhav @Nanditasweta @tanyahope_offl @Sarasmenon @bbsureshthatha @DOP_BKR @ArrolCorelli @MuniezEditor pic.twitter.com/67HYGqXcWZ
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com