சூர்யா அழுதபோது எனக்கு கண்ணீர் வந்தது: வைகைப்புயல் வடிவேலு!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ திரைப்படம் தீபாவளி விருந்தாக சூர்யா ரசிகர்களுக்கு நேற்று ரிலீசான நிலையில் இந்த படத்திற்கு ரசிகர்கள், ஊடகங்கள், சமூக வலைதள பயனாளர்கள் மற்றும் திரை விமர்சகர்கள் ஆகியோர் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். பெரும்பாலானோர் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்ததை அடுத்து இந்த படத்தை பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஓடிடி வரலாற்றில் இந்த படம் வசூலில் புதிய சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ’சூரரைப்போற்று’ படத்தில் சூர்யாவின் நடிப்பிற்கு திரையுலக பிரமுகர்களின் பாராட்டுக்கள் குவிந்து வருவது தெரிந்ததே. ஏற்கனவே பல திரையுலக பிரமுகர்கள் சூர்யாவுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்த நிலையில் தற்போது வைகைப்புயல் வடிவேலு அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’சூர்யா இந்தப் படத்தில் அழுதபோது எனக்கு கண்ணீர் வந்தது’ என்று கூறியுள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:
தம்பி சூர்யாவின் சூரரைப்போற்று படத்தை பார்த்தேன். அவர் அழும் இடங்களில் நம்மை அறியாமலே கண்ணீர் வருகிறது. இத்தகைய படைப்பை எம்மக்களுக்கு கொடுத்த படக்குழுவினருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்...
தம்பி சூர்யாவின் சூரரைப்போற்று படத்தை பார்த்தேன். அவர் அழும் இடங்களில் நம்மை அறியாமலே கண்ணீர் வருகிறது. இத்தகைய படைப்பை எம்மக்களுக்கு கொடுத்த படக்குழுவினருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ????@Suriya_offl #SooraraiPottru
— Actor Vadivelu (@VadiveluOffl) November 13, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments