நேசமணி கேரக்டர் குறித்து வடிவேலு கூறிய அசத்தல் பதில்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டரில் நேற்று ஒரு சிவில் இஞ்சினியரின் பக்கத்தில் சுத்தியல் குறித்து அவர் நண்பர் கேட்ட ஒரு கேள்விக்கு 'இது காண்ட்ராக்டர் நேசமணி தலையில் விழுந்த பொருள்' என்று பதிலளித்தார். அந்த நொடியில் இருந்து நேசமணி என்ற வார்த்தை உலகம் முழுவதும் வைரலாகிவிட்டது. வடிவேலுவின் இந்த நேசமணி கேரக்டர் 'பிரெண்ட்ஸ்' படம் ரிலீஸ் ஆனபோது கூட இந்த அளவுக்கு பிரபலமாகவில்லை
நேசமணி குறித்து ஆயிரக்கணக்கான மீம்ஸ்களை நெட்டிசன்கள் போட்டுத்தாக்கி வருகின்றனர். தற்போதைய நடிகர்கள், அரசியல்வாதிகள் முதல் கனடா நாட்டு பிரதமர் வரை இந்த நேசமணி மீம்ஸ்களில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் உலக அளவில் டிரெண்ட் ஆகியுள்ள நேசமணி குறித்து நடிகர் வடிவேலு கருத்து கூறுகையில், 'நேசமணி போன்ற கேரக்டர்களுக்கு கிடைக்கும் வரவேற்பு என்பது ஆண்டவன் எனக்கு அளித்த பரிசு' என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் இருந்து பிரிக்க முடியாத ஒரு மாபெரும் கலைஞன் வடிவேலு என்று நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர்.
உலக அளவில் வைரலாகிய நேசமணி: யாருப்பா இவர்?
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com