ஓட்டு போட்டவுடன் துள்ளி குதித்த நடிகர் வடிவேலு!

நேற்று பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துவிட்ட நிலையில் திரையுலகினர் உள்பட அனைவரும் ஆர்வத்துடன் வந்து ஓட்டு போட்டனர்.

இந்த நிலையில் நேற்று வாக்குப்பதிவு முடியும் ஒருசில மணி நேரத்திற்கு முன்னர் தனது வாக்கை பதிவு செய்தார் நடிகர் வடிவேலு. பூத்தில் தனது ஓட்டை பதிவு செய்தவுடன் ஓரிரு முறை துள்ளி குதித்த வடிவேலு பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

தேர்தல் என்பதை நான் ஒரு திருவிழா போன்றே பார்க்கின்றேப், மக்கள் நன்றாக சிந்தித்து ஓட்டு போடுகின்றனர்.. மக்கள் தெளிவாக உள்ளனர் என்றே கூறவேண்டும். குறிப்பாக இளைஞர்கள் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று தெளிவாக உள்ளனர். வாட்ஸ் அப் உள்ளிட்டவைகளில் அரசியல் பேசும் இளைஞர்கள் தங்களுடைய பெற்றோர்களுக்கே யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றனர்.

தேர்தலுக்கு பின் மக்களுக்கு விடிவுகாலம் வரும், அனைவருக்கும் நல்ல காலம் பிறக்கும். யார் வந்தாலும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பம். இவ்வாறு வடிவேலு கூறினார்.