அமைச்சர் உதயநிதியை சந்தித்த அடுத்த காமெடி நடிகர்.. எத்தனை லட்சம் நிவாரண நிதி?
- IndiaGlitz, [Friday,December 15 2023]
சென்னையில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெரு வெள்ளத்தின் காரணமாக பெரும் சேதம் ஏற்பட்ட நிலையில் பொதுமக்கள் தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகின்றனர். மேலும் தமிழக அரசும் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி தர உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் திரையுலக பிரபலங்கள் பலர் முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக அமைச்சர் உதயநிதியை சந்தித்து நிதி கொடுத்து வருகின்றனர் என்பதை பார்த்தோம். சூர்யா - கார்த்தி 10 லட்சம், சிவகார்த்திகேயன் 10 லட்சம், விஷ்ணு விஷால் 10 லட்சம், சூரி 10 லட்சமும் கொடுத்த நிலையில் தற்போது காமெடி நடிகர் வடிவேலு தனது பங்காக 6 லட்சம் ரூபாய் அளித்துள்ளார்.
இது குறித்த புகைப்படம் அமைச்சர் உதயநிதி தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கூறியிருப்பதாவது: மிக்ஜாம் புயல் மற்றும் கன மழையால் ஏற்பட்ட பாதிப்பை சீரமைக்க, கழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
இந்த சூழலில், அரசின் மீட்பு - நிவாரணப் பணிகளுக்கு உதவிடும் வகையில், 'முதலமைச்சரின் பொது நிவாரண நிதி'-க்கு திரைக்கலைஞர் அண்ணன் வடிவேலு அவர்கள் ரூ.6 லட்சத்துக்கான காசோலையை இன்று நம்மிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்.
மிக்ஜாம் புயல் மற்றும் கன மழையால் ஏற்பட்ட பாதிப்பை சீரமைக்க, கழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில், அரசின் மீட்பு - நிவாரணப் பணிகளுக்கு உதவிடும் வகையில், 'முதலமைச்சரின் பொது நிவாரண நிதி'-க்கு திரைக்கலைஞர் அண்ணன் வடிவேலு அவர்கள் ரூ.6 லட்சத்துக்கான காசோலையை இன்று… pic.twitter.com/yDYv9GvrZL
— Udhay (@Udhaystalin) December 15, 2023