பாஜகவில்… நடிகர் வடிவேலு????

 

வைகை புயல் வடிவேலு தேசிய கட்சியான பாஜகவில் இணைய உள்ளதாக வதந்தி ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. முன்னதாக திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட நடிகர் வடிவேலு சில காலமாக சினிமாவில் தலைகாட்டாமல் இருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது பாஜகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தத் தகவலைக் குறித்து அவர் தரப்பில் இருந்து எந்த உறுதியான விளக்கமும் வெளியாக வில்லை.

இவர் சினிமாவில் தொடர்ந்து நடிக்காமல் இருந்தாலும் அனைத்து சமூகவலைத் தளங்களிலும் மீம்ஸ் மற்றும் காமெடிகள் மூலம் தொடர்ந்து அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறார். காரணம் அந்த அளவிற்கு காமெடி நடிகர் வடிவேலு மக்கள் மத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். இந்நிலையில் அவர் பாஜகவில் இணைகிறார் என்றொரு தகவல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

சமீபகாலமாக ஏராளமான தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பாஜக கட்சியில் இணைந்து வருகின்றனர். இசையமைப்பாளர் கங்கை அமரன், கஸ்தூரி, ராதாரவி, கௌதமி, நமீதா, விஜயக்குமார், காயத்ரி ரகுமான், எஸ்.வி. சேகர், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், நடிகை குஷ்பு என பலரும் தற்போது தேசிய கட்சியான பாஜகவில் இணைந்து இருக்கின்றனர். அதைத் தொடர்ந்து நகைச்சுவை பிரபலம் நடிகர் வடிவேலும் பாஜவில் இணைய இருப்பதாக ஒரு தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அவரது தரப்பில் இருந்து எந்த உறுதியான விளக்கமும் வெளியிடப்பட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

திருமணமான மூன்றே மாதத்தில் தூக்கில் தொங்கிய சென்னை இளம்பெண்!

திருமணமான 3 மாதத்தில் சென்னை இளம்பெண் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

முதல்வரை சந்திக்கும் திரையரங்க உரிமையாளர்கள்: ஆயுதபூஜையன்று தியேட்டர்கள் திறக்கப்படுமா?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 7 மாதங்களாக தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ளன என்பது தெரிந்ததே. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள்

தமிழக முதல்வரை நேரில் சந்தித்த திரையுலக பிரபலங்கள்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் சமீபத்தில் காலமானதை அடுத்து முதல்வரின் வீட்டிற்கு நேரில் சென்று அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் ஆறுதல் கூறி வருகின்றனர் 

அர்ச்சனாவை அடுத்து மேலும் ஒரு வைல்ட்கார்ட் எண்ட்ரி: விறுவிறுப்பாகும் பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் முதலில் 15 போட்டியாளர்களும் அதன்பின் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக அர்ச்சனாவும் வருகை தந்தனர்

80 அடி நீர்வீழ்ச்சியில் மாட்டிக் கொண்டு தவித்த தமிழக மருத்துவ மாணவர்… பரபரப்பு சம்பவம்!!!

தமிழகத்தைச் சார்ந்த மருத்துவக் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்றுள்ளார்