நடிகர் வெங்கல் ராவுக்கு வடிவேலு செய்த நிதியுதவி.. எவ்வளவு கொடுத்தார் தெரியுமா?

  • IndiaGlitz, [Friday,June 28 2024]

பிரபல காமெடி நடிகர் வெங்கல்ராவ் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் சிலர் நிதி உதவி செய்து வருகின்றனர் என்பதை பார்த்தோம். அந்த வகையில் தற்போது வடிவேலு நிதி உதவி செய்த தகவல் வெளியாகி உள்ளது.

வடிவேலு நடித்த பல திரைப்படங்களில் காமெடி வேடங்களில் நடித்த கலக்கியவர் வெங்கல் ராவ் என்பதும், அவரது ஒவ்வொரு காமெடியும் குலுங்கி குலுங்கி சிரிக்கும் வகையில் இருக்கும் என்பதும் தெரிந்தது. ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட வெங்கல்ராவ் கடந்த சில வாரங்களாக உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற பணம் இல்லை என்பதால் அவர் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சிகிச்சை தொடர தனக்கு தன்னிடம் பணம் இல்லை என்றும் எனவே தனக்கு சினிமா கலைஞர்கள் நிதியுதவி செய்து உதவ வேண்டும் என்றும் வெங்கல்ராவ் வீடியோ ஒன்றின் மூலம் கோரிக்கை வைத்திருந்தார். அந்த கோரிக்கையை அடுத்து நடிகர் சிம்பு 2 லட்சம், ஐஸ்வர்யா ராஜேஷ் 25 ஆயிரம், கேபிஒய் பாலா ஒரு லட்சம் என நடிகர் நடிகைகள் சிலர் நிதி உதவி செய்தனர்.

இந்த நிலையில் தன்னுடன் பல திரைப்படங்களில் வெங்கல்ராவ் நடித்ததை அடுத்து வடிவேலுவும் தற்போது தனது பங்கிற்கு ரூபாய் ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி செய்துள்ளார். மேலும் அவருக்கு போன் செய்து அவரது உடல்நிலை குறித்தும் நடிகர் வடிவேலு கேட்டறிந்தார் என்றும் தகவல் வெளியாகி உள்ளன.

More News

சின்னத்திரை டிஆர்பியில் சறுக்கியதா 'சிறகடிக்க ஆசை'.. முதல் 10 இடங்களில் எந்தெந்த சீரியல்கள்?

சன் டிவி, விஜய் டிவி, ஜீ டிவி ஆகியவற்றில் ஏராளமான சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு வாரமும் இந்த சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் குறித்த தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

தனுஷ் கிட்ட நிறைய திட்டு வாங்கி இருக்கேன்.. 'ராயன்' படப்பிடிப்பு குறித்து கூறிய பிரபல நடிகை..!

தனுஷ் நடித்த 'ராயன்' திரைப்படம் அடுத்த மாதம் 26 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் சற்றுமுன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

'கல்கி 2898 ஏடி' முதல் நாள் வசூல் 180 கோடி இல்லை.. அதிகாரபூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்..!

பிரபாஸ் நடித்த 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் நேற்று பிரமாண்டமாக வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இந்த படத்தின் வசூல் குறித்த தகவல்கள் இன்று காலை

ராகவா லாரன்ஸ் அடுத்த படத்தில் இணையும் 2 பிரபலங்கள்.. இருவருமே நடிப்பு அரக்கன்கள்..!

ராகவா லாரன்ஸ் நடிக்கும் அடுத்த திரைப்படம் குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தில் இரண்டு பிரபலங்கள் இணைய இருப்பதாகவும் இரண்டு பேருமே நடிப்பு அரக்கன்கள்

திடீரென இந்தியா திரும்பும் அஜித்.. 'விடாமுயற்சி' படப்பிடிப்பு என்ன ஆச்சு?

நடிகர் அஜீத் தற்போது அஜர்பைஜானில் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் திடீரென அவர் இந்தியா திரும்ப இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.