புற்றுநோயால் பிரபல நடிகரின் மனைவி உயிரிழப்பு… திரையுலகினர் அதிர்ச்சி!

  • IndiaGlitz, [Monday,September 13 2021]

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம்வருபவர் நடிகர் உத்தேஜ். இவருடைய மனைவி பத்மாவதிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து தொடர் சிகிச்சை பெற்றுவந்த இவர் இன்றுகாலை அகால மரணமடைந்தார்.

தெலுங்கு நடிகர் உத்தேஜின் மனைவியான பத்மாவதி மயூகா டாக்கிஸ் ஃபிலிம் ஆக்டிங் ஸ்கூலை நிர்வகித்து வந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவர் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருடைய உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதால் பசவதாரகம் புற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனாலும் சிகிச்சை பலனின்றி பத்மாவதி இன்று காலை உயிரிழந்துள்ளார். அவருடைய உயிரிழப்பை அடுத்து பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து நடிகர் உத்தேஜிற்கு ஆறுதல் கூறினார். அப்போது நடிகர் சிரஞ்சீவியை கட்டிப்பிடித்து நடிகர் உத்தேஜ் கதறி அழும் காட்சி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.

நடிகர் சிரஞ்சீவியைத் தவிர நடிகர் பிரகாஷ் ராஜ், நடிகை ஜீவிதா போன்றோரும் மருத்துவமனைக்கு விரைந்து நடிகர் உத்தேஜ்க்கும் அவருடைய மகளுக்கும் ஆறுதல் கூறியுள்ளனர். நடிகர் உத்தேஜ்ஜின் மனைவி பத்மாவதியின் உயிரிழப்பைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் வெளியிட்டு வருகின்றனர்.

More News

இளைய வயது நடிகருடன் காதலா? கிண்டலடித்த நெட்டிசன்களை அலறவிட்ட நடிகை!

பாலிவுட் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகை ஒருவர் தன்னைவிட 9 வயது இளம் நடிகர் ஒருவரை காதலிப்பதாக வதந்தி கிளம்பியது.

நான்கு தெலுங்கு பட நிறுவனத்துடன் தனுஷ் ஒப்பந்தமா?

தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கிவரும் 'மாறன்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும், அது மட்டுமின்றி சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில்

கவினின் 'லிஃப்ட்' படத்தில் என்ன பிரச்சனை: விளக்க அறிக்கை!

கவின் நடிப்பில் 'லிஃப்ட்' என்ற திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் இந்த படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தின் பிரச்சினை குறித்து லிப்ரா நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பள்ளிக்கு லீவு போட்டுவிட்டு சைடு வேலைப்பார்த்த ஆசிரியர்… வசமா மாட்டிய சம்பவம்!

இத்தாலி நாட்டைச் சேர்ந்த கணித ஆசிரியர் ஒருவர் கடந்த 3 வருடங்களாகத் தனக்கு உடல்நிலை சரியில்லை

ரோஹித் சர்மாவுக்கு கேப்டன்சியா? பிசிசிஐ என்ன சொல்கிறது?

டி20 உலகக்கோப்பைத் தொடருக்குப் பிறகு இந்திய குறைந்த ஓவர் கிரிக்கெட் அணிக்கு அதாவது ஒருநாள்