கொரோனாவில் இருந்து மீண்ட பழம்பெரும் நடிகர் உயிரிழப்பு… திரையுலகினர் இரங்கல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
98 வயதில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அதில் இருந்து மீண்ட பழம்பெரும் நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி நேற்று காலமானார். கொரோனாவில் இருந்து மீண்ட அவருக்கு நேற்று தீடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு அதனால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து உள்ளார். இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மலையாள திரைப்படங்களில் தாத்தா வேடத்தில் நடித்து ரசிகர்களின் பேராதவரை பெற்றவர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி. தமிழில் நடிகர் நமல்ஹாசன் நடித்த “பம்மல் கே சம்பந்தம்” படத்திலும் “கண்டு கொண்டேன” “சந்திரமுகி” உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்து உளளார். இவர் நடித்த பெரும்பாலான படங்களில் காமெடி தாத்தாக வருவார். இதனால் இவருக்கு எனத் தனி ஒரு அடையாளமும் திரையுலகில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இவரது இறப்புக்கு வருத்தம் தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய டிவிட்டர் பதிவில் இரங்கல் செய்தி வெளியிட்டு உள்ளார். அதில்,“73 ஆவது வயதில் நடிக்க வந்து 18 வருடங்களாக மலையாளிகளைச் சிரிக்க வைத்தவர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி. இளமை துள்ளும் தாத்தாவாகக் கலையுலகில் வளைய வந்தவர். இன்னும் 2 ஆண்டுகளில் சதமடிக்க வேண்டியவர் இன்று நம்மை நீங்கி இருக்கிறார். நெஞ்சார்ந்த அஞ்சலிகள்” என பதிவிட்டு உள்ளார்.
73ஆவது வயதில் நடிக்க வந்து 18 வருடங்களாக மலையாளிகளைச் சிரிக்கவைத்தவர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி. இளமை துள்ளும் தாத்தாவாகக் கலையுலகில் வளையவந்தவர். இன்னும் 2 ஆண்டுகளில் சதமடிக்கவேண்டியவர் இன்று நம்மை நீங்கியிருக்கிறார். நெஞ்சார்ந்த அஞ்சலிகள். pic.twitter.com/Dqz6uHzAJ4
— Kamal Haasan (@ikamalhaasan) January 20, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments