நடிகர் தவக்களை காலமானார்.
Send us your feedback to audioarticles@vaarta.com
கே.பாக்யராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு உள்பட நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்த தவக்களை இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது. 42.
கடந்த 1980கள் மற்றும் 1990களில் முந்தானை முடிச்சு, ஆண்பாவம், காக்கி சட்டை உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ், உள்பட 6 மொழிகளில் சுமார் 496 படங்களில் நடித்துள்ள தவக்களை இன்று காலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார்.
சென்னை வடபழனியில் உள்ள அவரது வீட்டில் அவரது உடல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை அவரது இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிகிறது.
மறைந்த தவக்களையின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தார்களுக்கு நம்முடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதோடு, அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com