1080 ஏக்கர் கொடுத்த அரசுக்கு நன்றி தெரிவித்த பிரபல நடிகர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகர் ஒருவர் 1080 ஏக்கர் நிலத்தை தத்து எடுத்த நிலையில் தத்தெடுக்க அனுமதி அளித்த அரசுக்கு அவர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா என்பதும் அவர் கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தும்போது தெலுங்கானா மாநிலத்தில் 1080 ஏக்கர் நிலத்தை தத்தெடுத்து அதில் தனது தந்தையின் நினைவாக பூங்கா ஒன்று அமைக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் அவர் கேட்ட நிலத்தை தெலுங்கானா மாநில அரசு தற்போது அளித்துவிட்டது. இதனை அடுத்து 1080 ஏக்கர் நிலத்தை தத்துக் கொடுத்த தெலுங்கானா அரசுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்ட நாகார்ஜுனா, இந்த இடத்தில் தனது தந்தை நாகேஸ்வரராவ் நினைவாக பூங்கா அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்த பூங்காவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதன் புகைப்படத்தையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த அடிக்கல் நாட்டு விழாவில் நாகார்ஜுனா, அவரது மனைவி அமலா, மகன் நாக சைதன்யா உள்பட பலர் உள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மெத்சல் என்ற மாவட்டத்தில் அமைய உள்ள இந்த பூங்கா மிகச் சிறந்த சுற்றுலா தலமாக எதிர்காலத்தில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Many happy returns of the day to chief minister Kcr garu!
— Nagarjuna Akkineni (@iamnagarjuna) February 17, 2022
Happy to announce the adoption and laying the foundation for the ANR URBAN PARK in chengicherla forest area by the Akkineni family
?? to #kcr garu and @MPsantoshtrs for this opportunity #greenindiachallenge #HBDKCR pic.twitter.com/HcGZIiKm5k
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments