சூர்யாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சூர்யா சமீபத்தில் கூறிய புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்துக்களுக்கு ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி கிடைத்து வருவதை பார்த்து வருகிறோம். சூர்யாவின் கல்விக் கொள்கை குறித்த கருத்தை அதிமுக, பாஜக பிரமுகர்கள் எதிர்த்து வருவதும் இந்த இரு கட்சிகளை தவிர மற்ற கட்சியின் தலைவர்கள் ஆதரித்து வருவதுமாக இருப்பதால் இந்த விவகாரம் தற்போது அரசியல் ஆக்கப்பட்டு விட்டதாக தெரிய வருகிறது
இந்த நிலையில் சூர்யாவின் கருத்தை இன்று நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
புதிய கல்வி கொள்கை குறித்து சூர்யாவின் கருத்தை எதிர்க்கிறேன். தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை கொண்டுவர சூர்யா வலியுறுத்தி இருக்கவேண்டும். மாற்றத்துக்கு ஏற்ற கல்வியை படித்தால்தான் குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும். தகுதியை தாண்டிய வேலை வாய்ப்பு கொடுக்கப்படுவதாலேயே தமிழ்நாடு கல்வியில் பின்னடைவை சந்தித்துள்ளது. திராவிட கட்சிகளின் ஆட்சிகளால் தான் தமிழ்நாட்டின் கல்வி தரமே சீரழிந்துவிட்டது.
ஏற்கனவே சூர்யாவின் கருத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என நடிகர் சரத்குமார் நேற்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments