நடிகர் சூர்யா கல்வி அமைச்சராக வேண்டும்: தமிழ் நடிகர் விருப்பம்!

  • IndiaGlitz, [Tuesday,September 15 2020]

நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடே குரல் கொடுத்துக் கொண்டு வந்தாலும் நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஒரே ஒரு அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த இரண்டு நாட்களாக பாமரர்கள் முதல் நீதிபதிகள் வரை சூர்யாவின் அறிக்கை குறித்து விவாதம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழ் திரைப்பட நடிகரான சௌந்தரராஜா சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘சூர்யா விரைவில் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் குறிப்பாக அவர் கல்வித்துறைக்கு வந்தால் சிறப்பாக இருக்கும் என்றும் இது என்னுடைய விருப்பம் மட்டுமல்ல பல ஆயிரக்கணக்கான ரசிகர்களின் விருப்பம் ஆகவும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்

மேலும், சூர்யா சமூகத்தின் மீது மிகுந்தஅக்கறை கொண்டவர் என்றும் அவர் மட்டுமின்றி அவரது குடும்பமே கல்விக்காக நிறைய விஷயங்களை செய்து வருகிறார்கள் என்றும் நீட் தேர்வுக்கு எதிராக சூர்யா வெளியிட்ட அறிக்கையை நான் ஆதரிக்கிறேன் என்றும் நடிகர் சௌந்தரராஜா கூறியுள்ளார்

சுந்தர பாண்டியன், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம், ஜிகர்தண்டா, தெறி, பிகில் உள்பட பல திரைப்படங்களில் நடிகர் சௌந்தரராஜா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

கைலாசா நாட்டு பெண்களை வரன் கேட்கும் நம்ம ஊரு 90 கிட்ஸ்… வைரல் சம்பவம்!!!

நித்யானந்தா தான் உருவாக்கிய கைலாசா நாட்டை பற்றிய அறிவிப்பை வெளியிட்டதில் இருந்தே அங்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தைப் பலரும் கிண்டலாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

கனடா பிரதமரையும் விட்டுவைக்காத 'இந்தி தெரியாது போடா': நெட்டிசன்களின் கைவரிசை!

'இந்தி தெரியாது போடா' மற்றும் 'I am a தமிழ் பேசும் இந்தியன்' போன்ற வாசகங்கள் அடங்கிய டீ-ஷர்ட்டுகளை கடந்த சில நாட்களாக திரையுலக பிரமுகர்கள் அணிந்து வைரலாகி வருகின்றனர் என்பது தெரிந்ததே 

கொரோனாவுக்கு பலியான விஜய் படத்தில் அறிமுகமான நடிகர்: திரையுலகினர் இரங்கல்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும்

யார் இந்த நவோமி ஒசாகா… சாதித்தது என்ன???

சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் நவோமி ஒசாகா(22)  சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.

சசிகலா விடுதலையாகும் தேதி: சிறை நிர்வாகம் அறிவித்துள்ளதால் பரபரப்பு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை