அமைச்சர் முன்னிலையில் மேடையிலேயே அழுத சூர்யா: பெரும் பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முன்னிலையில் நடந்த ஒரு விழாவில் மேடையிலேயே சூர்யா அழுததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சூர்யா நடிகராக மட்டுமின்றி சமூக சேவைகள் செய்யும் வகையில் அகரம் என்ற அறக்கட்டளை ஏற்படுத்தி ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி பயில உதவி செய்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் அகரம் அறக்கட்டளை சார்பில் நேற்று சென்னையில் நூல் வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சூர்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய ஒரு ஏழை மாணவி ’தான் வாழ்க்கையில் சந்தித்த பல கஷ்டங்கள் மட்டும் குடும்ப சூழ்நிலை குறித்து நெகிழ்ச்சியுடன் சுமார் 10 நிமிடம் பேசினார். அவர் பேச ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை மேடையில் இருந்த சூர்யா கண் கலங்கி கண்ணீர் விட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சூர்யா மட்டுமின்றி மேடையில் இருந்த அனைத்து விஐபிக்களும், பார்வையாளர்களும் அந்த மாணவியின் பேச்சை கேட்டு கண்கலங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மாணவி பேச்சை முடித்ததும் எழுந்து வந்த சூர்யா அந்த மாணவியை தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறியது நெகிழ்ச்சியானதாக இருந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments