வாழ்க்கையில் ஒருமுறை மட்டும் நடக்கக்கூடியது.. நாளை மறுநாள் ரிலீஸ் படத்திற்கு சூர்யா வாழ்த்து..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நாளை மறுநாள் ரிலீஸ் ஆக இருக்கும் படத்திற்கு நடிகர் சூர்யா தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் அந்த வாழ்த்து பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பிரித்விராஜ் சுகுமாரன் மற்றும் அமலாபால் நடித்த ’ஆடுஜீவிதம்’ என்ற திரைப்படம் மலையாள நாவலை தழுவி எடுக்கப்பட்ட நிலையில் இந்த படத்தை பிளஸ்ஸி இயக்கி உள்ளார். இந்த படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. வறுமை காரணமாக அரபு நாட்டிற்கு வேலைக்கு சென்ற ஒருவர் அந்நாட்டில் ஒட்டகம் மேய்க்கும் அடிமை தொழில் பார்த்து வந்த நிலையில் அங்கிருந்து அவர் எப்படி தப்பித்து மீண்டும் கேரளா வந்தார் என்பது தான் இந்த படத்தின் கதை.
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் நடிகர் சூர்யா ’ஆடுஜீவிதம்’ படக்குழுவினர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து பதிவில் கூறியிருப்பதாவது:
’உயிர்பிழைத்தல் குறித்த ஒரு கதையை சொல்வது என்ற 14 வருட கனவை சாத்தியமாக்குவதற்கு ஒரு மிகப்பெரிய கடின உழைப்பு தேவை. வாழ்வில் ஒருமுறை மட்டுமே நடக்கக் கூடியது இது. ஒரு பிரம்மாண்ட ரிலீசுக்கு தயாராகும் இயக்குநர் பிளெஸ்ஸி மற்றும் படக்குழுவினர், பிருத்விராஜ், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளார்.
14 years of passion to tell a story of survival #Aadujeevitham This transformation & effort to put this together can happen only once in a lifetime! Heartiest wishes to @DirectorBlessy & Team @PrithviOfficial & @arrahman Sir for a grand release. https://t.co/yCiMW2xoq7
— Suriya Sivakumar (@Suriya_offl) March 26, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments