சூர்யாவின் முதல் பாலிவுட் திரைப்படம்.. உறுதி செய்த பிரபல பாலிவுட் இயக்குனர்..!

  • IndiaGlitz, [Saturday,October 05 2024]

நடிகர் சூர்யா தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் நிலையில், அவர் பாலிவுட்டில் அறிமுகமாக இருப்பதை பிரபல பாலிவுட் இயக்குனர் சமீபத்தில் உறுதி செய்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் சூர்யா நடித்த ’கங்குவா’ என்ற திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், தற்போது அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அந்தமான் தீவுகள், ஊட்டி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்த நிலையில், விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’வாடிவாசல்’ உள்ளிட்ட சில படங்களில் சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், பிரபல பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம் பிரகாஷ் சமீபத்தில் பேட்டி அளித்த போது, தனது அடுத்த படத்தில் சூர்யா நடிக்க உள்ளார் என்றும், இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே சூர்யா நடிப்பில், ராகேஷ் ஓம் பிரகாஷ் இயக்கத்தில் ’கர்ணா’ என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அந்த படத்தை தான் அவர் தற்போது குறிப்பிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. எனவே, சூர்யாவின் பாலிவுட் திரைப்படத்தின் அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

 

More News

நீங்கள் மேம்பட்ட மனிதராக மாற வேண்டுமா? அஜித் சொன்ன பழமொழி: வீடியோ வைரல்..!

ஒரு மனிதன் மேம்பட்ட மனிதராக வேண்டுமென்றால், பயணம் செய்ய வேண்டும் என்று அஜித் கூறிய வீடியோ, அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா அவர்களின் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள

இளையராஜா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் இணைந்த பிரபல எழுத்தாளர்.. எகிறும் எதிர்பார்ப்பு..!

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில், இளையராஜா கேரக்டரில் தனுஷ் நடிக்க இருக்கிறார்

'தளபதி 69' படத்தில் 'டாப் குக்கு டூப் குக்கு பிரபலம்.. கனவு நனவானதாக நெகிழ்ச்சி..!

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 69' படத்தின் பூஜை நேற்று நடந்த நிலையில் இன்று முதல் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் 'குக் வித் கோமாளி மற்றும்

'விடாமுயற்சி' அப்டேட் கொடுத்தால் உங்களுக்கு தான் ஓட்டு.. டிரம்ப் இடம் அஜித் ரசிகர்கள் கோரிக்கை..!

அஜித் நடித்த 'விடாமுயற்சி' அப்டேட் கொடுத்தால் உங்களுக்கு தான் எங்களது ஓட்டு என அமெரிக்க அதிபர் வேட்பாளர் டிரம்ப்  சமூக வலைதளத்தில் கமெண்ட்களாக மதுரை மாவட்ட அஜித் ரசிகர்கள்

டிஆர்பியில் டாப் இடங்களை பிடித்த சன் டிவி தொடர்.. பின்னுக்கு தள்ளப்பட்ட 'சிறகடிக்க ஆசை'..!

சன் டிவி மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொலைக்காட்சி தொடர்களின் டி.ஆர்.பி. ரேட்டிங் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில்,