ரௌத்திரம் கொண்டு திமிரும் காளை....!சூர்யா பர்த்டே "காமன் டிபி" வெளியானது.....!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் காமன் டிபி இன்று வெளியானது. இதை நடிகர் ஆர்யா உட்பட பல திரையுலக பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர்.
தமிழ் திரையுலகில் தலைசிறந்த நடிகராகவும், சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்ட மனிதராகவும், பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்ட மாமனிதனாகவும் வாழ்ந்து வருகிறார் நடிகர் சூர்யா. இவரின் பிறந்தநாளை மெருகேற்றும் வகையில், "வாடிவாசல்" தோற்றத்தில், பர்த்டே காமன் டிபியை வெளியிட்டுள்ளனர் சூர்யா ரசிகர்கள்.இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், ஜல்லிக்கட்டை மையக்கருத்தாகக் கொண்டு "வாடிவாசல்" என்ற திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார். இப்படத்தின் டைட்டில் லுக் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. மனிதனுக்கும், காளைக்கும் இடையில் உள்ள பாச உறவை வெளிப்படுத்தும் நோக்கில் டைட்டில் லுக் இருந்தது.
இந்நிலையில் மிரட்டலான பர்த்டே காமன் டிபியை சூர்யா ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர். அதில் "கூட்டமாக திரண்டிருக்கும் மக்களை, சூர்யா கயிற்றுடன் காளைபோல் திமிறிச்செல்வது போன்ற காட்சி உள்ளது. இந்த டிபியை நடிகர் ஆர்யா, "#SuriyaBdayCDPCarnival , Waiting for first look" என்று பதிவிட்டுள்ளார். இதேபோல் தயாரிப்பாளர் ராஜசேகரன், ஸ்டூடியோகிரின் ஞானவேல் ராஜா உள்ளிட்டோர் டுவிட்டரில் பகிர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்தை சூர்யா ரசிகர்கள் கொண்டாடுவது மட்டுமில்லாமல், டுவிட்டரில் ட்ரெண்டாக்கியும் வருகின்றனர்.
#SuriyaBdayCDPCarnival ??????
— Arya (@arya_offl) July 17, 2021
Waiting for first look ????@Suriya_offl pic.twitter.com/iAX93AAuH2
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments