பெண் பத்திரிகையாளர் தோளில் கை வைத்த விவகாரம்: முன்ஜாமீன் கேட்டு பிரபல நடிகர் மனு தாக்கல்..!

  • IndiaGlitz, [Sunday,December 31 2023]

பெண் பத்திரிகையாளர் தோளில் கை வைத்த விவகாரத்தில் தன்னை கைது செய்யாமல் இருக்க பிரபல நடிகர் ஒருவர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் உருவான ’அந்நியன்’ உட்பட பல தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்தவர் நடிகர் சுரேஷ் கோபி. பாஜக பிரமுகரான இவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த நிலையில் சமீபத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது கேள்வி கேட்ட பெண் பத்திரிகையாளர் ஒருவர் தோளில் நடிகர் சுரேஷ் கோபி கை வைத்த நிலையில் அந்த பெண் கையை தட்டி விட்ட போதிலும் மீண்டும் அவர் தோளை தொட்டு பேசினார். இது தொடர்பான வீடியோ சர்ச்சைக்கு உள்ளான நிலையில் அதன் பிறகு அவர் மன்னிப்பு கேட்டார்.

இந்த நிலையில் அந்த பெண் செய்தியாளர் காவல் நிலையத்தில் சுரேஷ்கோபி மீது புகார் அளித்துள்ள நிலையில் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமின் கேட்டு நடிகர் சுரேஷ் கோபி மனு தாக்கல் செய்துள்ளதாகவும் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

More News

தினேஷ்-ரக்சிதா குறித்து விசித்ராவின் பேச்சு.. தனது பாணியில் கண்டித்த கமல்ஹாசன்..!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் தினேஷ் மற்றும் ரக்சிதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விசித்ரா பேசியதை கமல்ஹாசன் தனது பாணியில் கண்டித்து உள்ளார்.

'டாக்டர்' 'டான்' படங்களை விட இந்த படம் தான் எனக்கு பெஸ்ட்.. காரணங்களை கூறிய சிவகார்த்திகேயன்..!

 நான் நடித்த படங்களில் அதிக வசூல் செய்த படம் என்றால் 'டான்', அந்த படம் 125 கோடி வசூல் செய்தது. அதனை அடுத்து 'டாக்டர்' படம் 100 கோடி வசூல் செய்தது என்று கூறிய சிவகார்த்திகேயன்

'தளபதி 68' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்.. ரிலீஸ் தேதியை அறிவித்த அர்ச்சனா கல்பாத்தி..!

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 68' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் புத்தாண்டு தினத்தில் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது.

தமிழ் திரையுலகில் ஒரு 4ஆம் பாக திரைப்படம்.. பிரபல நடிகரின் மகன் தான் ஹீரோ..!

 தமிழ் திரை உலகில் இரண்டாம் பாக திரைப்படம் என்பது அதிகமாக தயாராகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 'சிங்கம்' உள்பட  ஒரு சில படங்கள் மூன்றாம் பாகமாகவும் வந்துள்ளது.

கோபம் வரும்போது என்ன செய்ய வேண்டும்? புத்தாண்டு ரெசல்யூஷன் சொல்லும் போட்டியாளர்கள்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி 90 நாட்களை தாண்டி விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் நாளை புத்தாண்டை முன்னிட்டு ஒவ்வொரு போட்டியாளரும் சக போட்டியாளர்களுக்கு