10 ரூபாய்க்கு தரமான சாப்பாடு கொடுத்து நெகிழ வைக்கும் பிரபல நடிகர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம்வந்த நடிகர் சிவக்குமாரின் இளைய மகனும் தற்போது முன்னணி நடிகருமாக இருந்துவரும் கார்த்தி தனது “உழவன்“ பவுண்டேஷன் சார்பாக சென்னையின் சில பகுதிகளில் 10 ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டத்தை ரசிகர்களின் உதவியோடு அமல்படுத்தியிருக்கிறார். இவரது முன்னெடுப்புக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.
ஏற்கனவே இவரது அண்ணன், நடிகர் சூர்யா “அகரம்“ பவுண்டேஷனைத் துவங்கி ஏழைக் குழந்தைகளின் படிப்பிற்கு உதவிவருகிறார். இந்நிலையில் அவருடைய தம்பி கார்த்தி “உழவன்“ எனும் அமைப்பை நிர்வகித்து வருகிறார். இதில் சிறந்த விவசாயிகளை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்குவது, பழங்கால விதைகளை சேகரித்து வைப்பது, ஊர்ப்புறங்களில் கால்வாய் மற்றும் நீர்நிலைகளைப் பராமரிப்பது போன்ற விஷயங்களை ஆக்கத்துடன் செய்துவருகிறார்.
அந்த வரிசையில் தற்போது நடிகர் கார்த்தியின் அறிவுரைப்படி சென்னை பகுதியில் 10 ரூபாய்க்கு சாப்பாடு கொடுக்கும் உணவு வண்டிகள் திறக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக சென்னையின் வளசரவாக்கம் பகுதியில் வண்டிகளில் 10 ரூபாய்க்கு அவருடைய ரசிகர்கள் தரமான சாப்பாட்டை கொடுத்து வருகின்றனர்.
150 நாட்களை கடந்து இந்தத் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் நடிகரும் இயக்குநருமான காதல் சுகுமார் 10 ரூபாய் சாப்பாட்டைப் பற்றி தன்னுடைய சோஷியல் மீடியா பதிவில் பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில், “சென்னையில் எங்கெங்கும் இப்போது பார்க்க முடிகிறது, 10 ரூபாய்க்கு தரமான சாப்பாடு!!! நல்ல நண்பனாக! நல்ல தந்தையாக!, நல்ல மனிதநேயனாக கார்த்தி மிளிருகிறார்!!.
மேலும் தனது ரசிகர்களை வெறுமனே விசிலடிச்சான் குஞ்சுகளாக பார்க்காமல்… கரம் கொடுத்து சி(க)ரம் உயர வைக்கிறார். அண்ணாமலை படத்தில் வினுச்சக்கரவர்த்தி சொல்வாரே… புள்ளன்னு பெத்தா இப்பிடி ஒரு புள்ளையப் பெக்கணும்! உதாரணம் கார்த்தி எனப் பதிவிட்டு இருப்பது நடிகர் கார்த்தியின் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments