நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு இவ்வளவு பெரிய மகன், மகளா? ஆச்சரிய புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Monday,March 01 2021]

தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் நடிகர்களில் ஒருவர் ஸ்ரீகாந்த், ’ரோஜா கூட்டம்’ என்ற திரைப்படத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு அறிமுகமானார். அவர் அதன்பின் ’ஏப்ரல் மாதத்தில்’ ’பார்த்திபன் கனவு’ ’வர்ணஜாலம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். தளபதி விஜய்யுடன் ’நண்பன்’ என்ற திரைப்படத்தில் இவர் நடித்த கேரக்டர் மிகப் பெரிய புகழை இவருக்குப் பெற்றுத் தந்தது என்பது குறிப்பிடதக்கது.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் ரீஎன்ட்ரி ஆகி ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த 2007ஆம் ஆண்டு வந்தனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடனும், மகன் மற்றும் மகளுடனும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஸ்ரீகாந்த் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இன்னும் இளமையான தோற்றத்தில் காட்சியளிக்கும் ஸ்ரீகாந்துக்கு இவ்வளவு பெரிய மகன், மகளா? என நெட்டிசன்கள் ஆச்சரியத்துடன் அந்த பதிவுக்கு லைக்ஸ்களை அள்ளி குவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீகாந்த் வில்லனாக நடித்துள்ள ’மிருகா’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.