'தளபதி 63' படத்தில் இணைந்த 'தெறி' பட நடிகர்

  • IndiaGlitz, [Monday,March 04 2019]

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு ஒருபுறம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு புறம் இந்த படத்தில் பிரபல நட்சத்திரங்கள் இணைந்து வருகின்றனர். சமீபத்தில் இந்த படத்தில் 'பரியேறும் பெருமாள்' கதிர் இணைந்தார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நடிகர் செளந்திரராஜன் இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய 'தெறி' படத்தில் 'கார்த்திக்' என்ற கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 'தளபதி 63' படத்தில் இணைந்தது குறித்து நடிகர் செளந்திரராஜன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'தெறி படத்திற்கு பின் மீண்டும் விஜய்யுடன் ஒரு சிறிய ஆனால் அதே நேரத்தில் முக்கிய கேரக்டரில் 'தளபதி 63' படத்தில் இணைந்திருப்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக நான் அட்லி அவர்களுக்கு நன்றி சொல்லி கொள்கிறேன். இன்று விஜய்யுடன் இணைந்து நடித்த மகிழ்ச்சிகரமான தருணத்தை வெளிப்படுத்த எனக்கு வார்த்தைகளே தெரியவில்லை' என்று கூறினார்.

விஜய், நயன்தாரா, பரியேறும் பெருமாள்' கதிர், யோகிபாபு, விவேக், ஆனந்த்பாபு, தீனா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க, அட்லி இயக்கி வருகிறார்.